டிராக்டர் விற்று டிக்கெட்.. இத்தனை லட்சமா விலை.. தோல்விக்கு பின் பாகிஸ்தான் ரசிகர் வருத்தம்

0
4114

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையான டி20 போட்டியை காண பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் தனது சொந்த டிராக்டரை விற்று டிக்கெட்டுகளை வாங்கி இருக்கும் வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தனது டிராக்டரை விற்று டிக்கெட்டுகள் வாங்கி இருந்தாலும், பாகிஸ்தானின் தோற்றது வருத்தம் அளிப்பதாக பாகிஸ்தான் ரசிகர் கூறி இருக்கிறார்.

- Advertisement -

ஒன்பதாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் நடைபெற்று வரும் நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய முக்கியமான போட்டி அமெரிக்காவின் நியூயார்க் மைதானத்தில் நடைபெற்றது. பொதுவாக இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இதுபோன்ற முக்கிய ஐசிசி தொடர்களில் மட்டுமே மோதிக் கொள்வதால் இந்த ஒரு போட்டி மட்டும் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும்.

இதற்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே இணையதளத்தில் விற்று தீர்ந்துள்ள நிலையில், போட்டியைக் காண மைதானத்திற்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் அதிக அளவு வந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சாதாரண போட்டிகளை காட்டிலும் இது முக்கியமான போட்டி என்பதால் டிக்கெட்டின் விலை அதிகமாக இருந்ததாகவும் ரசிகர்கள் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில் பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் தனக்கு சொந்தமான டிராக்டரை விற்று 3000 அமெரிக்க டாலர்கள் கொடுத்து டிக்கெட் வாங்கி இருக்கிறார். அதாவது இந்திய மதிப்பில் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ஆகவும், பாகிஸ்தானின் பண மதிப்பில் எட்டு லட்சத்து 40 ஆயிரம் ஆகும். இவ்வளவு விலை கொடுத்து டிக்கெட் வாங்கியும் பாகிஸ்தான் அணி அந்த போட்டியில் வெற்றி பெறாமல் தோல்வி அடைந்தது வருத்தம் அளிப்பதாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அந்த ரசிகர் தனது கருத்தை தெரிவிக்கும் போது
“3000 அமெரிக்க டாலர்கள் செலவழித்து டிக்கெட்டினை வாங்க எனது டிராக்டரை விற்றேன். முதலில் பேட்டிங் செய்த இந்தியாவின் ரன்களை பார்த்தபோது, பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் நிச்சயமாக வெற்றி பெற்று விடும் என்று நினைத்தேன். ஆனால் பாபர் ஆஸம் ஆட்டம் இழந்து வெளியேறிய போது, ஆட்டத்தின் சூழ்நிலை மாறியதால் மனம் உடைந்து போனேன். வெற்றி பெற்ற இந்திய ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள்” என்று கூறினார். அவர் தழுதழுத்த குரலில் மனம் உடைந்து பேசிக் கொண்டிருந்த போது இந்திய ரசிகர்கள் அவரை சூழ்ந்து இந்தியா ஜிந்தாபாத் நாமத்தை உச்சரித்து கரகோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க:சச்சின் இப்படி பண்ண மாட்டாரே.. பாகிஸ்தான் தோல்விக்கு பின் அவர் வெளியிட்ட பதிவு.. ரசிகர்கள் ஆச்சரியம்

தனது அமைதியை தக்க வைத்து திரும்பவும் பேச முயன்ற அந்த ரசிகர் “பாகிஸ்தான் அணி வெற்றி பெற வாய்ப்பு இருந்தது எனவும், இந்த தோல்வி மிகவும் சங்கடமாக இருக்கிறது” என்றும் கூறினார். டிராக்டரை விட்டு டிக்கெட் வாங்கி சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது.