இலங்கை வீரர் கணிப்பு சரியானது.. வெஸ்ட் இண்டீஸ்க்கு செக் வைத்த கேசவ் மகாராஜ்.. தென் ஆப்பிரிக்கா முன்னிலை

0
337
Keshav

தற்போது தென் ஆப்பிரிக்க அணி டெம்பா பவுமா தலைமையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு வெஸ்ட் இன்டீஸ்க்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணிக்கு கேசவ் மகாராஜ் முன்னிலையை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்.

இந்த போட்டிக்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வது என முடிவு செய்தது. அந்த அணிக்கு பேட்டிங்கில் அதிகபட்சமாக கேப்டன் டெம்பா பவுமா 182 பந்தில் 86 ரன்கள் எடுத்தார். மேலும் துவக்க ஆட்டக்காரர் டோனி டி சோர்சி 145 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

முதல் நாள் போட்டியில் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் தென் ஆப்பிரிக்க அணி இறுதியாக முதல் இன்னிங்ஸில் 117.4 ஓவர்களில் 357 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் பந்துவீச்சில் ஜோமல் வாரிக்கன் நான்கு விக்கெட், ஜெய்டன் சீல்ஸ் மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்ய களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் மைக் லூயிஸ் 90 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து கேசவ் மகாராஜ் பந்தில் ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து தாக்குப் பிடித்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்றாவது முடிய சில ஓவர்கள் மட்டுமே இருக்க ஒரு விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் என சிறப்பான நிலையில் இருந்தது.

இந்த நிலையில் கேப்டன் பிரத்வெயிட் 131 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து சிறப்பாக விளையாடிய அறிமுக வீரர் கேசி கார்தி 42 ரன்கள், அலீக் ஆதனாஸ் 3 ரன்கள் என அடுத்தடுத்து கேசவ் மகாராஜ் வீழ்த்தினார். கடைசி நேரத்தில் 10 ரன்களுக்கு மூன்று முக்கிய விக்கெட்டுகளை வெஸ்ட் இண்டீஸ் இழந்தது. இதன் காரணமாக தற்பொழுது 124 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுகளை இழந்திருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : ஐபிஎல் 2025 மெகா ஏலம்… பிசிசிஐ தரப்பில் வெளியான புது அப்டேட்.. சிஎஸ்கே தோனி ரசிகர்கள் நிம்மதி

முதல் டெஸ்ட் போட்டியில் மூன்றாம் நாள் முடிவில் 212 ரன்கள் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி பின்தங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் நாதன் லயன் இருவருடன் சேர்த்து தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகாராஜ் சிறப்பான சுழல் வந்து வீச்சாளராக இருக்கிறார் என இலங்கையின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் ரங்கனா ஹெராத் கூறியிருந்தார். அவருடையகணிப்பு சரியாகவே அமைந்திருக்கிறது.