18வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில், அந்த சீசனுக்கான மெகா ஆக்சன் டிசம்பர் முதல் பிப்ரவரி மாதத்தில் இடைப்பட்ட நாட்களில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் மகேந்திர சிங் தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா? அல்லது மாட்டாரா? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் பிசிசிஐ தக்கவைப்பு வீரர்களுக்கான தகவலை வெளியிட்டுள்ளதாக கிரிக் பஸ் இணையதளம் அறிவித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த மகேந்திர சிங் தோனி கடைசியாக 2023ஆம் ஆண்டு சென்னை அணிக்காக ஐந்தாவது கோப்பையை வென்று கொடுத்ததோடு கடந்த சீசனில் தனது கேப்டன் பதவியையும் துறந்தார். தற்போது தோனிக்கும் 43 வயது ஆவதால் அடுத்த சீசனில் விளையாடுவாரா? அல்லது மாட்டாரா? என்ற சந்தேகம் நீடிக்கிறது. இந்த நிலையில் அவருக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் டெல்லி அணி வீரரான ரிஷப் பண்டை சிஎஸ்கேவில் இழுக்க முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட மகேந்திர சிங் தோனி தக்கவைப்பு வீரர்களுக்கான எண்ணிக்கையை ஐபிஎல் நிர்வாகம் அறிவிக்கப்பட்ட பிறகுதான் சிஎஸ்கேவில் விளையாடுவது குறித்து முடிவெடுக்கப் போவதாக மகேந்திர சிங் தோனி கூறினார். அதாவது ஒரு அணி ஐந்து அல்லது ஆறு வீரர்களை தக்க வைத்துக்கொள்ள அனுமதி அளித்தால் தோனி அடுத்த ஆண்டு சென்னை அணிக்காக விளையாடுவார் என்று கூறப்பட்டது.
இந்த சூழ்நிலையில் கிரிக் பஸ் இணையதளத்தில் சமீபத்தில் வெளிவந்துள்ள அறிக்கையின்படி, ஆறு வீரர்களை ஒரு அணி தக்க வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆறு வீரர்களை தக்க வைத்துக்கொள்ள அனுமதி அளித்து இருப்பதோடு ஏலத்தின் போது நடைபெறும் ஆர்டிஎம் மூலமும் வீரர்களை திரும்பவும் வாங்கி கொள்ளலாம்.
பிசிசிஐ அதிகாரிகள் மற்றும் ஐபிஎல் உரிமையாளர்கள் இடையே நடைபெற்ற கூட்டத்தில் சில ஐபிஎல் உரிமையாளர்கள் மெகா ஏலம் நடைபெறக் கூடாது என்று கூறப்பட்டு வரும் நிலையில் மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நிச்சயமாக நடைபெறும் என்று பிசிசிஐ வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதனால் மகேந்திர சிங் தோனி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடுவார் என்றும் தகவல் வெளிவரும் நிலையில் இதை அறிந்த சிஎஸ்கே ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
இதையும் படிங்க:டெல்லி தூக்குனா என்ன.. ரிக்கி பாண்டிங்கை சரியா யூஸ் பண்ண.. 3 ஐபிஎல் டீம்ஸ்க்கு அடிக்கும் செம்ம லக்
அடுத்த ஆண்டு அவர் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்றாலும் அவர் சென்னை அணியின் ஆலோசகராகவோ அல்லது சென்னை நிர்வாகத்தின் முக்கிய பொறுப்பில் நிச்சயமாக இருப்பார். சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் காசி விஸ்வநாதன் இடத்திற்கு கூட தோனி வருவதாக சமீபத்தில் வெளிவந்த தகவல்கள் தெரிவித்து இருக்கின்றன.