தற்போது இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது வின்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்து பரிதாப நிலைமையில் இருக்கிறது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் 159 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்திய பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா ஐந்து விக்கெட் வீழ்த்தினார்.
இந்திய அணியும் சரிவு
இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி தனது முதல் வின்னிங்சில் 189 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணிக்கு கேஎல்.ராகுல் 39 மற்றும் வாஷிங்டன் சுந்தர் 29 ரன்கள் எடுத்தார்கள். தென் ஆப்பிரிக்க பந்துவீச்சில் சைமன் ஹார்மர் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து இன்று விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் டெம்பா பவுமா மட்டும் ஆறுதல் அளிக்கும் வகையில் விளையாடி ஆட்டம் இழக்காமல் 78 பந்தில் 29 ரன்கள் எடுத்திருக்கிறார். இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்திருக்கிறது. மேலும் 63 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது.
இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு
இந்திய அணியின் பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக பந்து வீசி நான்கு விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். இன்னொரு சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட் மற்றும் அக்சர் படேல் ஒரு விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்கள்.
இதையும் படிங்க : ஜடேஜாவை விட்டுக் கொடுத்து சாம்சனை வாங்க இதுதான் காரணம்.. நாங்க தப்பு செய்யல – சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் விளக்கம்
தற்போது இந்த போட்டி நடைபெற்று வரும் கொல்கத்தா ஈடன் கார்டன் ஆடுகளம் சுழல் பந்து வீச்சு மற்றும் வேகப்பந்து வீச்சு என இரண்டுக்குமே சாதகமாக இருக்கிறது. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணிக்கு 100 ரன்கள் இலக்கு நிர்ணயிப்பதே தற்பொழுது கடினமாகி இருக்கிறது.






