ஜடேஜாவை விட்டுக் கொடுத்து சாம்சனை வாங்க இதுதான் காரணம்.. நாங்க தப்பு செய்யல – சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் விளக்கம்

0
299
Jadeja

சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜாவை டிரேடிங் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விட்டுக் கொடுத்ததற்கான காரணம் குறித்து, சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் முதல் முறையாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.

சிஎஸ்கே அணி தங்களது வீரரை டிரேடிங் மூலம் எப்பொழுதும் விட்டுக் கொடுக்காது. இந்த நிலையில் 18 வருட ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக சிஎஸ்கே அணி தனது வீரரை டிரேடிங் செய்திருக்கிறது. கடந்த மெகா ஏலத்தில் வீரர்களை சரியாக வாங்காத காரணத்தினால் இந்த முடிவுக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இதுதான் முக்கிய காரணம்

இது குறித்து காசி விஸ்வநாதன் கூறும்பொழுது “சிஎஸ்கே அணி சாம் கரன், ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை டிரேடிங் செய்து கொண்டுள்ளது என்பது உங்களுக்கு தெரிந்த விஷயம். எங்களுடைய அணி நிர்வாகம் ஒரு டாப் ஆர்டர் இந்திய பேட்ஸ்மேனை விரும்பியது. ஆனால் ஏலத்தில் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் கிடைப்பது கடினம். எனவே எங்களுக்கு டிரேடிங் செய்வதுதான் சிறந்த வழியாக இருந்தது”

“இதன் காரணத்தால் தான் நாங்கள் இந்த கடினமான முடிவை எடுக்க வேண்டி இருந்தது. ஜடேஜா போன்ற ஒரு வீரரை நாங்கள் நீக்க வேண்டியதாக அமைந்தது. இது ரசிகர்களுக்கு வருத்தத்தை உண்டாக்கி இருக்கும் என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் சிஎஸ்கே அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அணி நிர்வாகம் இந்த முடிவை எடுத்தது”

- Advertisement -

ஜடேஜா உடன் பேசினோம்

“இது குறித்து சம்பந்தப்பட்ட வீரருடன் பேசுவது முக்கியம். நாங்கள் இது குறித்து ஜடேஜா உடன் பேசி பரஸ்பரமாகவே இந்த முடிவு எடுத்தோம். அவரும் தனக்கு இன்னும் கொஞ்ச காலமே வெள்ளை பந்து கிரிக்கெட் இருப்பதை உணர்ந்திருக்கிறார். எனவே அவர் இந்த மாற்றத்திற்கு சம்மதித்தார்”

இதையும் படிங்க : வெறும் 30 ரன்.. கேப்டன் கில் பயந்தது போலவே நடந்தது.. இந்திய அணி ஆல் அவுட்.. தென் ஆப்பிரிக்கா சிறப்பான பந்துவீச்சு

“சஞ்சு சாம்சன் ஐபிஎல் தொடரில் மிகவும் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன். அவர் 4500 ரன்கள் எடுத்திருக்கிறார். மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியையும் வழிநடத்தி இருக்கிறார். அவருக்கு நல்ல அனுபவம் இருக்கிறது. மேலும் அவருக்கு முப்பது வயதுதான் ஆகிறது. அவர் சிஎஸ்கே வின் எதிர்காலத்தை கவனித்துக் கொள்ள ஒரு கூடுதல் வீரராக இருப்பார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -