இந்திய ஏ அணி தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 417 ரன்கள் இலக்கு நிர்ணயித்தும் கூட தோல்வி அடைந்தது தற்பொழுது பயிற்சியாளர் கம்பீருக்கு சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தத் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி வெற்றி பெற்று முன்னிலை வகித்தது. இந்த நிலையில் இந்த போட்டியையும் இந்திய அணி வென்று விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணி தோல்வி அடைந்திருப்பது அடுத்த தென் ஆப்பிரிக்க தொடருக்கு முன்பாக பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
நான்கு நட்சத்திர பவுலர்கள்
இந்தத் தொடரின் முதல் போட்டி சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் நடத்தப்பட்டது. அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சிக்கு சாதகமான ஆடுகளத்தில் நடத்தப்பட்டது ஆனால் இந்திய அணி தோல்வியை அடைந்திருக்கிறது.
இந்த இந்திய ஏ அணியில் பவுலிங் யூனிட்டில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா மற்றும் ஆகாஷ் தீப் மூவரும் இடம் பெற்று இருந்தார்கள். மேலும் முன்னணி சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவும் விளையாடினார். நான்கு நட்சத்திர பவுலர்கள் இருந்தபோதும் இந்திய ஏ அணி தோல்வி அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கம்பீருக்கு ஏற்பட்ட சிக்கல்
தற்போது சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அடுத்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்த இரண்டு போட்டிகளையும் வெல்வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : சாம்சனை தரோம்.. இந்த 2 வீரர்களை தாங்க.. சிஎஸ்கேவிடம் ராஜஸ்தான் வைத்த கோரிக்கை.. ரசிகர்கள் கவலை
தற்போது இந்திய அணி நிர்வாகம் சுழல் பந்து வீச்சுக்கு அதிக சாதகம் தரும் ஆடுகளங்களை விரும்பவில்லை. ஏனென்றால் இந்திய பேட்ஸ்மேன்களால் ரன் எடுக்க முடிவதில்லை. எனவே ஓரளவுக்கு வேகப்பந்து வீச்சுக்கு சாதகம் இருக்கும் ஆடுகளங்களை அமைக்க விரும்புகிறது. ஆனால் நமது வேகப்பந்துவீச்சாளர்கள் 417 ரன் இருந்தும் தோல்வியடைந்து இருக்கிறார்கள். மேலும் தென் ஆப்பிரிக்க அணியில் வலிமையான வேகப் பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். தற்போது என்ன செய்வது என கம்பீருக்கு இது புதிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.






