இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்திய முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.
தற்போது இந்திய அணி ஆசிய சாம்பியனாகவும் மேலும் உலகச் சாம்பியன் ஆகவும் டி20 வடிவத்தில் இருந்து வருகிறது. மேலும் சொந்த மண்ணில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கின்ற காரணத்தினால் இந்திய அணி வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இது அழுத்தமாகவும் மாறுகிறது.
சுவாரசிய வரலாறு
அதே சமயத்தில் டி20 உலகக் கோப்பையை நடத்தும் நாடுகள் அந்த உலகக் கோப்பையை வென்றதில்லை என்கின்ற சுவாரசியமான வரலாறு இருந்து வருகிறது. இந்த முறை இந்திய அணி இதை மாற்றுமா என்கின்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்திய அணி எல்லா துறைகளிலும் பலமாக இருப்பதே இந்த எதிர்பார்ப்புக்கு காரணம்.
தற்போது இந்திய அணியின் ஒரே சிக்கலாக துவக்க இடத்தில் அபிஷேக் ஷர்மாவுடன் இணைந்து விளையாட போவது யார் என்கின்ற கேள்விதான். ஒருவேளை இஷான் கிஷான் விளையாடுவார் என்று முடிவு செய்யப்பட்டு விட்டால் அந்த பிரச்சனையும் தீர்ந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
சவுரவ் கங்குலி அறிவுரை
இதுகுறித்து சவுரவ் கங்குலி கூறும் பொழுது “இந்தியா மிகச் சிறந்த அணி. தற்போது அவர்கள் மிகவும் வலிமையான நிலையில் இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். பேட்டிங் சுழல் பந்துவீச்சு மற்றும் பும்ரா தலைமையிலான வேகப்பந்து வீச்சு என அணியில் எல்லா பக்கத்திலும் நிறைய தரமும் திறமையும் இருக்கிறது”
இதையும் படிங்க : வாஷிங்டன் சுந்தர் டி20 உலக கோப்பையில் ஆடுவாரா.. அவருக்கான மாற்று வீரர் யார்?.. முக்கிய அலசல்
“இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் தொடரின் முக்கியமான நேரத்தில் உச்சத்தை அடைந்து போட்டியில் வெல்வதுதான். கடந்த கால வெற்றிகளில் எந்த அர்த்தமும் கிடையாது. இதை இந்திய அணி செய்யும் என்று நான் நம்புகிறேன். இந்த உலகக் கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் இந்திய அணி என்னுடைய விருப்ப அணியாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.






