வாஷிங்டன் சுந்தர் டி20 உலக கோப்பையில் ஆடுவாரா.. அவருக்கான மாற்று வீரர் யார்?.. முக்கிய அலசல்

0
12
Sundar

தற்போது டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வாஷிங்டன் சுந்தர் காயத்தால் வெளியில் இருக்கிறார். இவர் மேற்கொண்டு டி20 உலக கோப்பை தொடரில் விளையாடுவாரா? என்று சந்தேகம் உருவாகி இருக்கிறது.

கடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாஷிங்டன் சுந்தர் உடலின் ஒரு பக்கத்தில் விலா எலும்பில் வலியை உணர்ந்தார். இதற்குப் பிறகு அவர் தொடரில் இருந்து உடனடியாக வெளியேறினார். பிறகு அவர் காயம் குறித்த முன்னேற்றமான செய்திகள் எதுவும் வெளியில் வரவில்லை.

- Advertisement -

ஆரம்பிக்கப்படாத பயிற்சி

ஒரு வீரர் உடல் தகுதியை எட்டி இருக்கிறார் என்பதற்கு அடையாளமாக அவர் சிமுலேஷன் எனப்படும் பயிற்சியில் ஈடுபடுவார். அதாவது ஒரு ஓவருக்கு இத்தனை ரன்கள் எடுக்க வேண்டும், அல்லது ஒன்று இரண்டு ஓவர்களில் இத்தனை ரன்கள் கொடுக்கக் கூடாது என போட்டி போலவே பயிற்சி செய்வதுதான் சிமுலேஷன் பயிற்சி.

இத்தகைய பயிற்சியில் இப்பொழுது வரை வாஷிங்டன் சுந்தர் ஈடுபடவில்லை என்று செய்திகள் தெரிவிக்கிறது. அவர் சாதாரணமாக பேட்டிங் பயிற்சியில் மட்டுமே கொஞ்சம் ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு ஏற்பட்டுள்ள காயத்திற்கு பந்து வீசுவது தான் மிகவும் கடினமானது. எனவே பந்துவீச்சு பயிற்சியை அவர் ஆரம்பிக்காதது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

யார் மாற்று வீரர்?

தற்போதைக்கு வாஷிங்டன் சுந்தர் அக்சர்படைகளின் பேக்கப் வீரராகவே இருக்கிறார். அவர் உறுதியாக பிளேயிங் லெவனில் இடம் பெறக்கூடியவராக இல்லை. மேலும் அக்சர் படேல் ஒரு பவுலிங் ஆல்ரவுண்டர். வாஷிங்டன் சுந்தரும் இதே போலானவர். இந்திய அணி நிர்வாகத்திற்கும் ஒரு பவுலிங் ஆல்ரவுண்டர்தான் தேவைப்படுகிறது. ஆனால் இப்போதைக்கு வாஷிங்டன் சுந்தரை தவிர யாரும் அப்படி இல்லை.

இதையும் படிங்க : இன்று சஞ்சு சாம்சன் கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கியமான நாள்.. காத்திருக்கும் பெரிய சோகம் – முக்கிய தகவல்கள்

எனவே இந்திய அணி நிர்வாகம் பேட்டிங் ஆல் ரவுண்டரை தேர்வு செய்ய விரும்பாது. வாஷிங்டன் சுந்தர் உடல் தகுதி பெறாவிட்டால் அவருடைய இடத்தை ரவி பிஸ்னாய்க்கு கொடுப்பார்கள். அவர் முழு நேர பவுலர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ஒரு பேக்கப்பாக இருப்பதால் பிரச்சனை இல்லை. சிவம் துபே, ஹர்திக் பாண்டியா வரிசையில் இன்னொரு பேட்டிங் ஆல் ரவுண்டரை தேர்வு செய்வது இந்திய பவுலிங் யூனிட்டை பலவீனப்படுத்தும். எனவே ரவி பிஸ்னாய் மாற்று வீரராக இடம்பெற அதிக வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -