கம்பீர் இந்த வீரர் விஷயத்தில் நடந்து கொள்வதை புரிஞ்சுக்க முடியல.. ஏன் இப்படி பண்றாங்க? – கங்குலி கேள்வி

0
2
Ganguly

இந்திய டி20 அணியில் ஒரு குறிப்பிட்ட வீரருக்கு இடமில்லாதது தனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுப்பதாக சௌரவ் கங்குலி கூறி இருக்கிறார்.

தற்போது சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணியை உலக கோப்பையை கைப்பற்றி சாம்பியனாக இருக்கிறது. அதே சமயத்தில் சர்வதேச தரத்துடன் களம் இறங்குவதற்கு இன்னொரு அணி வெளியில் இருக்கிறது.

- Advertisement -

முக்கியமான வீரர்கள்

மிகக்குறிப்பாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவருமே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டிய அவசியம் இல்லை. இருந்தும் அவர்கள் வெளியில் இருக்கும் வீரர்கள் காரணமாக ஓய்வு பெற்றார்கள். தற்போதும் அவர்களால் இந்திய டி20 அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக விளையாட முடியும்.

இன்னொரு பக்கத்தில் ஜெய்ஸ்வால், வைபவ் சூரியவன்சி, ருதுராஜ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இருக்கிறார்கள். சிறந்த பவுலர்கள் சிராஜ், குல்தீப் யாதவ் மற்றும் ரவி பிஸ்னாய் போன்றவர்களுக்கும் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.

- Advertisement -

இது எனக்கு ஆச்சரியம்

இதுகுறித்து சவுரவ் கங்குலி பேசும் பொழுது ” டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா தனது இரண்டாவது அணியை களம் இறக்கி இருக்க முடியும். குறிப்பாக துவக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா வந்திருக்க முடியும். இவர்களுடன் கேஎல்.ராகுல், ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை”

இதையும் படிங்க : சூரியவன்சி தொழில்முறை வீரர் ஆகமாட்டார்.. அவர் மேல ஒரு மில்லியன் டாலர் முதலீடு செய்வேன் – டிவிலியர்ஸ் ஜிதேஷ் சர்மா விவாதம்

“அதே சமயத்தில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஒரே ஒரு டி20 போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கொடுக்கப்படுவதில்லை. இந்திய ஒரு நாள் அணியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவருக்கு, கம்பீர் டி20 அணியில் இடம் கிடைக்காதது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை உருவாக்குகிறது. வெளியில் இருக்கும் வீரர்களை பார்த்தால் இன்னொரு அணியை இந்தியா களம் இறக்கலாம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -