சூரியவன்சி தொழில்முறை வீரர் ஆகமாட்டார்.. அவர் மேல ஒரு மில்லியன் டாலர் முதலீடு செய்வேன் – டிவிலியர்ஸ் ஜிதேஷ் சர்மா விவாதம்

0
7
Jitesh

இந்திய உள்நாட்டு வீரர் வைபவ் சூரியவன்சி தற்போதைய தொழில் முறை வீரர் போல இருக்கிறார் என ஏபி.டிவில்லியர்ஸ் பேசியதற்கு ஜிதேஷ் சர்மா மறுப்பு தெரிவித்து பேசி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

நேற்று வைபவ் சூரியவன்சி குறித்தான உரையாடலில் ஏபி டிவில்லியர்ஸ் அவரைப்பற்றி மிகவும் வியந்து பேசி தொழில் முறை வீரராக அவர் வருவார் என கூறினார். ஆனால் அவரை இந்திய ஏ அணிக்கு வழி நடத்திய கேப்டன் ஜிலேஷ் சர்மா அப்படி அவர் ஆக மாட்டார் என்று நகைச்சுவையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஏபி.டிவில்லியர்ஸ் கருத்து

இது குறித்து ஏபி.டிவில்லியர்ஸ் பேசும்பொழுது “வைபவ் சூரியவன்சி ஒரு சிறந்த வீரர். அவரை நான் அண்டர் 19 கிரிக்கெட்டில் பார்த்திருக்கிறேன். ஐபிஎல் போன்ற ஒரு பெரிய தொடரில் சுவையை அறிந்த பிறகும், அவர் கீழ்மட்ட கிரிக்கெட்டில் இவ்வளவு அற்புதமாக விளையாடுவது ஆச்சரியமானது. அவர் என்னைக் கவர்ந்த தொழில் முறை வீரராக இருக்கிறார். அவர் இந்த வயதில் மிகவும் பக்குவப்பட்ட வீரராகவும் இருக்கிறார்”

“நான் அவர் விளையாடிய விதத்தைப் பற்றி பேசுகிறேன். அவர் தன்னுடைய ஆட்டத்திட்டத்தை கைவிடவில்லை. ஐபிஎல் தொடரில் விளையாடியது போலவே விளையாடினார். அதிரடியாக விளையாடும் திட்டத்தை மாற்றிக் கொள்ளவில்லை. ஆனால் பந்துவீச்சாளர்களிடம் ஆணவமாகவும் நடந்து கொள்ளவில்லை. அவர் ஒரு தொழில் முறை வீரராக இருந்தார்”

- Advertisement -

ஜிதேஷ் சர்மா மறுப்பு

இதுகுறித்து ஜிதேஷ் சர்மா பேசும்பொழுது “தற்போது உலக கிரிக்கெட்டில் ஒரு மில்லியன் டாலர் முதலீட்டை ஒரு இளம் வீரர் மேல் செய்வேன் என்றால் அது வைபவ் சூரியவன்சிதான். அவர் உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்த முடியும் என நான் நினைக்கிறேன். அவரிடம் அபாரமான மிகச்சிறந்த திறமையும் திறன்களும் உள்ளது”

இதையும் படிங்க : எனக்கு அந்த விஷயம் ஏறுமுகத்துல இல்ல இறங்குமுகத்துல இருக்கு.. ஆனா நான் முயற்சி பண்றேன் – தோனி தந்த பதில்

“அவர் தளத்திற்கு உள்ளே தொழில் முறை வீரராக இருக்கலாம். ஆனால் அவர் களத்திற்கு வெளியே தொழில் முறை வீரராக மாறிவிடுவார் என நான் நினைக்கவில்லை. முதலில் இரவில் வெளியே சென்று ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்பதை அவர் உடனே கைவிட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -