இந்திய கிரிக்கெட்

சச்சின் இல்லை.. கவாஸ்கருக்கு பிறகு இவரே சிறந்த தொடக்க பேட்ஸ்மேன் – கங்குலி அதிரடி கருத்து

பிரபல சினிமா தளமான நெட்பிளிக்ஸ் பிப்ரவரி ஏழாம் தேதி வெளியிட இருக்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் குறித்தான ஆவண படத்தில் பேசி இருக்கும் சவுரப் கங்குலி சுனில் கவாஸ்கருக்கு பிறகு யார் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்? என்பது குறித்து கூறியிருக்கிறார்.

- Advertisement -

தற்போது இந்த ஆவணத் தொடரை வெளியிடுவதற்கு முன்பாக நெட்பிளிக்ஸ் தளம் முதலில் இதற்கான பிரமோவை வெளியிட்டு இருக்கிறது. இதில் அதிரடியான இப்படியான கருத்தை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரப் கங்குலி தெரிவித்திருக்கிறார்.

வெளியாக இருக்கும் முக்கிய ஆவணப்படம்

தற்போது குறிப்பிட்ட இந்த ஆவணப்படம் பிப்ரவரி 7ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடைப்பட்ட போட்டி குறித்தான வரலாற்று தகவல்கள் பற்றி சம்பந்தப்பட்ட இருநாட்டு வீரர்களும் சுவாரசியமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இதற்கான பிரமோவை முன்கூட்டி வெளியிட்டு இருப்பது ரசிகர்களிடையே இந்த ஆவணப்படம் குறித்தான எதிர்பார்ப்பை மிகவும் அதிகரித்திருக்கிறது. இப்போதைக்கு இந்திய தரப்பில் இருந்து சவரவ் கங்குலி சுனில் கவாஸ்கர், வீரேந்திர சேவாக் ஆகியோரும், பாகிஸ்தான் தரப்பில் இருந்து அக்தர், ஜாவித் மியான்தத் ஆகியோர் பேசியிருக்கும் துணுக்குகள் வெளியாகி இருக்கின்றன.

- Advertisement -

இவரே சிறந்த தொடக்க ஆட்டக்காரர்

இதில் ஒரு இடத்தில் சவுரவ் கங்குலி குறிப்பிடும் பொழுது “நான் பார்த்ததில் சுனில் கவாஸ்கருக்கு அடுத்து சிறந்த தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக்தான். அதே சமயத்தில் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர்கள் ஓடிவரும் பொழுது பந்தை மறைத்து விடுவார்கள். நீங்கள் அவர்கள் பந்து வீச ஓடிவரும் பொழுது பார்த்தால் அவர்கள் பந்தை மறைத்துதான் எடுத்து வருவார்கள். வீசுவதற்கு ஒரு நொடிக்கு முன்னால் பந்தில் சில மாற்றத்தை ஏற்படுத்தி வீசுவார்கள்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க : நான் சாம்பியன்ஸ் டிராபி ஆட நினைக்கல.. என் கனவே வேற.. அவருக்கு நன்றி – கருண் நாயர் பேட்டி

பாகிஸ்தான் வீரர்கள் பற்றி பேசி இருக்கும் வீரேந்திர சேவாக் “அவர்கள் புதிய பந்தை தேய்ப்பதிலும், அதிலிருந்து ரிவர்ஸ் ஸ்விங் எடுப்பதிலும் முழு பாகிஸ்தான் அணி வீரர்களும் மிகவும் திறமையானவர்கள். பந்தின் பளபளப்பான பகுதி வெளியில் இருக்கும். நீங்கள் வெளியில் இருக்கும் பளபளப்பான பகுதியை பார்ப்பீர்கள். ஆனால் பந்து உங்களுக்கு உள்நோக்கி வரும். இந்த மாதிரியான வித்தைகள் அவர்கள் மிகவும் சிறந்தவர்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by