பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை விட ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் இந்திய அணியின் திறமை உயரத்தில் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் ஆல் ர்வுண்டர் இர்பான் பதான் கருத்து தெரிவித்திருக்கிறார்.
இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நாளை துபாய் சர்வதேச மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது. இந்த தொடரில் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் போட்டியாகவும் இது அமைந்திருக்கிறது. அதே சமயத்தில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தோல்வி அடைந்திருக்கிறது. இந்திய அணியுடன் தோற்றால் அரையிறுதி வாய்ப்பை இழந்து விடும்.
பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் பிரச்சனை
இதுகுறித்து இர்பான் பதான் கூறும்பொழுது “பாகிஸ்தான் அணியை பொறுத்தவரையில் அவர்களுக்கு நிறைய சிக்கல்கள் இருக்கிறது. பாகிஸ்தானின் சில சீனியர் பேட்ஸ்மேன்கள் தற்போதைய நவீன கிரிக்கெட் முறையில் பேட்டிங் செய்வது கிடையாது. எனவே இவர்கள் இதை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். ஆனால் இப்படி திடீரென மாற்றியமைப்பது அவர்களுக்கு மிகவும் கடினமானது”
“ஆனால் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி இதையெல்லாம் தாண்டியது. இரு அணிகளில் யார் சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை பொறுத்து வெற்றி அமைகிறது. குறிப்பிட்ட நாளில் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளக் கூடியவர்கள் வெற்றி பெறக் கூடியவர்களாக இருப்பார்கள் என்பதுதான் முக்கியமானது”
இந்தியாவின் திறமை பெரியது
“இந்திய அணியை இந்த விஷயத்தில் சமீபத்தில் பார்க்கும் பொழுது கடினமான நேரத்தில் கிடைக்கும் சந்தர்ப்பங்களை மிகத் திறமையாக பயன்படுத்திக் கொள்வதில் சிறப்பாக இருந்து வருகிறது. திறமையை பொறுத்தவரையில் எடுத்துக் கொண்டால் இந்திய அணி பாகிஸ்தான் அணியை விட முன்னே இருக்கிறது. மிகக்குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி முன்னே இருக்கிறது”
இதையும் படிங்க : கில் காட்டின இந்த 2 விஷயம் போதும்.. அவர் ஒரு தங்கங்க.. குறைவா நினைச்சீங்க – அஸ்வின் கருத்து
“இந்திய அணிகள் தற்பொழுது ஷமி திரும்ப வந்திருப்பது மேலும் ஆல்ரவுண்ட் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பது, இத்துடன் இந்திய டாப் ஆர்டரில் அனைவரும் சிறப்பாக விளையாடுவது என்று இந்திய அணி மிகவும் சிறப்பான நிலையில் காணப்படுகிறது. எனவே இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்” என்று கூறியிருக்கிறார்.






