நான் கம்பீர் இடத்துக்கு வரணும்.. இப்ப தயார் ஆயிட்டேன்.. காரணம் இதுதான் – கங்குலி வெளிப்படை பேச்சு

0
339
Ganguly

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தற்போது கம்பீர் செயல்பட்டு வருகிறார். கம்பீருக்கு முழு சுதந்திரத்தை பிசிசிஐ வழங்கி இருக்கிறது. இந்த தருணத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறாமல் இருந்தாலும் சாம்பியன்ஸ் கோப்பையை இந்திய அணி கம்பீரின் வழிகாட்டுதலில் வென்றது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி பயிற்சியாளராக வர விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியானது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கங்குலி, “உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் இதைப் பற்றி எல்லாம் யோசித்தது கிடையாது. ஏனென்றால் நான் ஏற்கனவே பல பொறுப்புகளை வகித்திருக்கிறேன்.”

- Advertisement -

தயாராக இருக்கிறேன்:

” 2013 ஆம் ஆண்டிலிருந்து நான் கிரிக்கெட் பக்கமே திரும்பவில்லை. அதன் பிறகு பிசிசிஐயின் தலைவர் பொறுப்பை ஏற்றேன். ஆனால் எதிர்காலம் எனக்கு என்ன வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. தற்போது தான் எனக்கு 53 வயதாகிறது. எனவே என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.”

” நான் அனைத்து பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள தயாராக தான் இருக்கின்றேன். ஆனால் நிகழ்வுகள் நம்மை எங்கே கொண்டு செல்கிறது என்று பார்ப்போம். என்னுடைய முக்கிய பங்கு மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவித்தது தான் என்று நான் நினைக்கின்றேன். தற்போதைய பயிற்சியாளர் கம்பீர் நல்ல பணியை தான் செய்து வருகின்றார்.”

- Advertisement -

கம்பீர் குறித்தும் கருத்து:

“ஆரம்பத்தில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற தொடர்களில் தோல்வி அடைந்து தடுமாறினாலும் தற்போது அவர் சாம்பியன்ஸ் கோப்பையை வென்று சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இங்கிலாந்து தொடர் நிச்சயமாக கம்பிருக்கு ஒரு மிகப்பெரிய தொடராக இருக்கும்.நான் விளையாடிய காலத்தில் கம்பீரை அருகில் இருந்து பார்த்திருக்கின்றேன். அவர் எப்போதுமே கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டவர்.”

இதையும் படிங்க: கில் ரிஷப் பண்ட் பேட்டிங்கில மாற்றத்தை பண்ணி இருக்காங்க.. நேர்மையா இதை சொல்கிறேன் – இந்திய பேட்டிங் கோச் தகவல்

“பயிற்சியாளராக அவருடைய யுத்திகள் எப்படி இருக்கிறது என்று நான் அருகில் இருந்து பார்க்கவில்லை. ஏனென்றால் அவர் பயிற்சியாளராக இருந்தபோது நான் எந்த பொறுப்பிலும் இல்லை. ஆனால் மனதில் நினைப்பதை பேசும் ஒரு நபராக தான் கம்பீர் இருக்கின்றார். ஒளிவு மறைவின்றி செயல்படுகின்றார். நீங்கள் எதைப் பார்க்கிறீர்களோ அது மட்டும் தான் உங்களுக்கு தெரியும். கம்பீர் பயிற்சியாளராக மெருகேறுவார் என்று நான் நம்புகிறேன்” என்று கங்குலி கூறியுள்ளார்.

- Advertisement -