கில் ரிஷப் பண்ட் பேட்டிங்கில மாற்றத்தை பண்ணி இருக்காங்க.. நேர்மையா இதை சொல்கிறேன் – இந்திய பேட்டிங் கோச் தகவல்

0
85
Pant

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் துணை கேப்டன் ரிஷப் பண்ட் இருவரும் தங்களுடைய பேட்டிங்கில் மாற்றத்தை செய்திருக்கிறார்கள் என இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சிதான்சு கோடக் கூறியிருக்கிறார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் மற்றும் துணை கேப்டன் இருவரும் அபாரமாக விளையாடி சிறந்த பாட்னர்ஷிப் அமைத்து, மேலும் இருவரும் சதம் அடித்து அசத்தினார்கள்.

- Advertisement -

மோசமான ஆஸ்திரேலியா தொடர்

அதே சமயத்தில் இதற்கு முன்பாக இவர்கள் இருவருக்கும் ஆஸ்திரேலியா டெஸ்ட் சுற்றுப்பயணம் மிக மோசமானதாக அமைந்திருந்தது. கில் பேட்டிங் டெக்னிக் குறித்தும், ரிஷப் பண்ட் பேட்டிங் அணுகுமுறை குறித்தும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் நிறைய விமர்சனங்கள் இருந்தது. முன்னாள் வீரர்கள் பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள்.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு மிகச் சிறப்பான முறையில் வந்திருக்கிறார்கள். அதே சமயத்தில் இவர்கள் தங்களுடைய பேட்டிங் டெக்னிக் மற்றும் பேட்டிங் அணுகு முறையில் மாற்றங்களை செய்து இருப்பதாக இந்திய பேட்டிங் பயிற்சியாளர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

நேர்மையாக உண்மையை சொல்கிறேன்

இதுகுறித்து சிதான்சு கோடக் கூறும்பொழுது “ஆஸ்திரேலிய டெஸ்ட் சுற்றுப்பயணம் முடிந்த பிறகு கில் சில விஷயங்களை யோசித்து தன்னுடைய பேட்டிங்கில் மாற்றி இருக்கிறார். இது அவராக செய்ய மாற்றம்தான். ஏனென்றால் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் அதற்கு அடுத்து தொடர்கள் என எனக்கு கில் உடன் பேட்டிங்கில் வேலை செய்ய நேரம் கிடைக்கவில்லை. நான் வலையில் அவரைப் பார்த்தவுடன் நீங்கள் மாற்றம் செய்திருக்கிறீர்கள் என்று கூறினேன். ஆமாம் நான் சில மாற்றங்கள் செய்திருக்கிறேன் என அவர் என்னிடம் சொன்னார். அவர் தாமாக இப்படி செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது”

இதையும் படிங்க : 5 இந்திய பேட்ஸ்மேன்களுக்கு.. சச்சின் தந்துள்ள தனித்தனி வேற லெவல் ஐடியா.. சரி செய்வார்களா?

“ரிஷப் பண்ட் பேட்டிங் அணுகுமுறையை அவர் தானாகவே உருவாக்குகிறார். ஒரு குறிப்பிட்ட போட்டியில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்ற திட்டத்தை அவர்தான் உருவாக்கிக் கொள்கிறார். நேற்று நீங்கள் அவரை பார்க்கும் பொழுது வழக்கத்தை விட அவர் வித்தியாசமாக இருந்திருப்பார். அவருக்கு எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நன்றாக தெரியும்” என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -