” அடேங்கப்பா எப்பேர்பட்ட வீரர் ; இது ஆல் டைம் சிறந்தது ” – ஜோ ரூட்டைப் புகழ்ந்து தள்ளிய சவுரவ் கங்குலி

0
89
Sourav Ganguly about Joe Root

ஐ.பி.எல் முடிந்த கையோடு வெஸ்ட் இன்டீஸ் அணி நெதர்லாந்து அணியோடு ஒருநாள் போட்டிகளில் மோதி முடித்திருக்க, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்தில் முகாமிட்டு இருக்கிறது.

இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் ஆட்டம் கடந்த இரண்டாம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்று பேட் செய்த நியூசிலாந்து அணி 132 ரன்களில் அடங்கியது. அடுத்து இங்கிலாந்து அணி 141 ரன்களில் சுருண்டது. இங்கிலாந்து தரப்பில் மேத்யூ போட்ஸ், ஆண்டர்சன் தலா நான்கு விக்கெட்டுகளையும், நியூசிலாந்து தரப்பில் டிம் செளதி, டிரெண்ட் போல்ட் தலா மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

- Advertisement -

இரண்டாவது இன்னிங்ஸில் டேரில் மிட்ச்செல் 108 ரன்கள், டாம் ப்ளூன்டால் ரன்கள் அடிக்க, நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணிக்கு 277 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. பிராட், போட்ஸ் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸின் அரைசதம் [54], பென் போக்ஸின் ஆட்டமிழக்காத 32 ரன், ஜோ ரூட்டின் பிரமாதமான ஆட்டமிழக்கா சதத்தால் [115] இலக்கை எட்டி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஜோ ரூட்டிற்கு இது 26வது டெஸ்ட் சதமாகும். மேலும் இந்தச் சதத்தை அடித்தபோது மிகச்சரியாக பத்தாயிரம் ரன்களையும் டெஸ்டில் எட்டினார். டெஸ்டில் பத்தாயிரம் ரன்னை தொட்ட பதினான்காவது வீரர் ஜோ ரூட் ஆவார்.

ஜோ ரூட்டின் இந்த நான்காவது இன்னிங்ஸ் வெற்றி சதம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி பாராட்டி ட்வீட் செய்திருக்கிறார். அதில் “ஜோ ரூட்… என்ன அற்புதமான வீரர்! அழுத்தத்தின் கீழ் என்னவொரு அற்புதமான ஆட்டம்! இது எந்தக் காலத்திலும் சிறந்தது!” என்று தெரிவித்திருக்கிறார்!

- Advertisement -