இந்திய கிரிக்கெட்

ஆஸி நீங்க என்னென்ன சொன்னீங்க.. இத செய்யுங்க இல்லனா மறக்க முடியாததா ஆயிடும் – கங்குலி பேட்டி

இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற்றது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பாராட்டி பேசி இருக்கிறார்.

- Advertisement -

ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்று இருக்கிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என பல விதமான கணிப்புகள் வெளிவந்தன. இதை தற்போது இந்திய அணி முறியடித்திருக்கிறது.

இந்திய அணியின் பின்னடைவுகள்

இந்த தொடருக்கு முன்பாக இந்திய அணி உள்நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து அணியிடம் முழுமையாக தோற்றது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் கேப்டன் ரோஹித் சர்மா, கில் மற்றும் ஷமி ஆகியோர் இடம் பெறவில்லை.

மேலும் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் கேஎல்.ராகுல் ஆகியோர் நல்ல பேட்டிங் பார்மில் இல்லை. இதன் காரணமாக ஆஸ்திரேலிய தரப்பில் இந்திய அணி முதல் டெஸ்டில் தோல்வியடையும் என முன்னாள் வீரர்களும் மீடியாக்களும் தொடர்ந்து பேசி வந்தன. இதுவும் இந்திய அணிக்கு மனரீதியாக பின்னடைவை கொடுத்தது.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

இந்திய அணியின் வெற்றி குறித்து பேசி இருக்கும் சவுரவ் கங்குலி கூறும் பொழுது ” நான் இந்த தொடருக்கு முன்பாக இந்தத் தொடர் குறித்து ஒன்று இரண்டு பேட்டிகள் கொடுத்தேன். மேலும் ஆஸ்திரேலிய பக்கத்தில் இருந்து இந்திய அணி முதல் டெஸ்டில் தோற்கும் என்றும், இந்திய அணியை ஒயிட் வாஸ் செய்வார்கள் என்றும் செய்திகள் வந்தது. ஆஸ்திரேலியா மீடியாக்கள் இதை வெளிப்படையாகவே அறிவித்தன”

இதையும் படிங்க : சிஎஸ்கே ராஜஸ்தானிடம் ஏலத்தில் செய்த தப்பு.. காப்பாற்றிய மும்பை இந்தியன்ஸ்.. களத்தில் என்ன நடந்தது?

“இப்படி இருக்க முதல் டெஸ்டில் இவர்களை வீழ்த்தியது யார் என்று பாருங்கள். இந்திய கிரிக்கெட்டில் மிக அபாரமான திறமைகள் இருக்கின்றன. ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை நன்றாக விளையாட ஆரம்பித்தீர்கள் இல்லையென்றால் இந்தத் தொடர் உங்களுக்கு மறக்க முடியாததாக மாறிவிடும். பும்ரா, கோலி, 22 வயது ஜெய்ஸ்வால், நிதீஷ் குமார் கேஎல்.ராகுல் என எல்லோரும் கலக்கி விட்டார்கள். மேலும் இந்தியாவின் வெற்றிக்காக எனது விரல்களை நான் நீட்டிக் கொண்டிருப்பேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by