நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி கொல்கத்தா அணி எதிர்த்து விளையாடி இருக்கிறது. இந்த போட்டிக்கு முன்பாக தோனி குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பேசியிருக்கிறார்.
தற்போது முழங்கையில் காயமடைந்த சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி விட்டார். இதைத்தொடர்ந்து சிஎஸ்கே அணி நிர்வாகம் புதிய கேப்டனாக மீண்டும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை கொண்டு வந்திருக்கிறது. அவர் உடனடியாக இன்று சொந்த மைதானத்தில் பொறுப்புக்கு வருகிறார்.
யாரும் நெருங்க முடியாத சாதனைகள்
ஐபிஎல் தொடரில் அதிக முறை கோப்பையை வென்ற கேப்டனாக ரோஹித் சர்மா உடன் இணைந்து ஐந்து கோப்பைகளை மகேந்திர சிங் தோனி வென்று இருக்கிறார். அதே சமயத்தில் கேப்டனாக ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளை வென்ற ஒரே ஒருவராக இருக்கிறார். இந்த சாதனைக்கு அருகில் இன்னொருவர் வருவதற்கு மிகவும் கடினம்.
இந்த நிலையில் தற்பொழுது சிஎஸ்கே அணி தொடர்ந்து நான்கு போட்டிகளை தோற்று இருக்கிறது. எனவே சிஎஸ்கே அணி வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் மிக அதிகமாக இருக்கிறது. புதிய கேப்டனாக மகேந்திர சிங் தோனி வந்து இருப்பதால் இது உடனடியாக மாறும் என ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் அணியில் இருந்த நல்ல பேட்ஸ்மேன் ருதுராஜ் வெளியேறுவது சிஎஸ்கே அணிக்கு பிரச்சினையை உருவாக்கி இருக்கிறது.
தோனி வித்தியாசமான மிருகம்
இந்த நிலையில் தோனி கேப்டன் ஆவது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பேசும் பொழுது ” தோனி சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து விளையாடுகிறார் என்றால் அவர் கேப்டனாக மட்டும்தான் விளையாட வேண்டும். அதுதான் அவர் வீரராக விளையாடுவதை விட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. ஏனென்றால் தோணி கேப்டனாக ஒரு வித்தியாசமான மிருகம்”
இதையும் படிங்க : சிஎஸ்கே-க்கு காத்திருக்கும் வரலாற்று சோகம்.. கேப்டன் தோனி தடுப்பாரா.. என்ன வியூகம் வரும்?
“தோனியால் இன்னும் சிக்ஸர் அடிக்க முடிகிறது. நாம் அதை அவர் விளையாடிய மற்ற போட்டிகளில் பார்த்திருக்கிறோம். 2005 ஆம் ஆண்டில் வந்த தோனியை தற்போதும் நாம் எதிர்பார்க்கவில்லை. வயதாவது என்பதும் அதனால் சில விஷயங்கள் குறைவது என்பது இயல்பானது. ஆனால் இன்னும் சிக்ஸர் அடிக்கும் சக்தியை பெற்று இருக்கிறார் என்று நினைக்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்.






