ரோகித் பிரச்சனை இல்லை.. ஹர்திக் செய்ய முடிந்த இந்த வேலையையே செய்யறது இல்லை – கங்குலி விமர்சனம்

0
11
Ganguly

இன்று இந்திய அணி டி20 உலக கோப்பை தொடரில் தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இன்றைய போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் சாதக பாதகங்கள் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பேசியிருக்கிறார்.

தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணி சமபலம் கொண்ட அணியாகவே காணப்படுகிறது. நான்கு சுழல் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்து கொண்டு போய் இருப்பது மட்டுமே சிறிது விமர்சனத்தை உண்டாக்குகிறது. ஒரு சுழல் பந்துவீச்சாளரை குறைத்து அந்த இடத்தில் ரிங்கு சிங்கை அணியில் தேர்ந்தெடுத்து இருக்கலாம் என்பது பலரது கருத்தாக இருக்கிறது.

- Advertisement -

மேலும் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் யார்? என்பதும் கேள்வியாக இருந்து வருகிறது. மிகக் குறிப்பாக ஹர்திக் பாண்டியா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் மீண்டும் சிறப்பான நிலைக்கு திரும்பி வர வேண்டிய அவசியம் உருவாகி இருக்கிறது. தற்பொழுது இது குறித்து சவுரவ் கங்குலி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

அவர் இதுகுறித்து கூறும் பொழுது “ஹர்திக் பாண்டியா வித்தியாசமானவர். ஏனென்றால் அவர் அதிகம் கிரிக்கெட் விளையாட மாட்டார். இதுதான் அவரிடம் எனக்கு கவலையான விஷயம். நான் அவர் அதிக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். அவரால் நிச்சயமாக அதிக கிரிக்கெட் விளையாட முடியும். அப்படி செய்தால் மட்டுமே அவரால் சிறப்பான நிலைக்கு திரும்ப முடியும்.

ரோகித் சர்மாவின் ஐபிஎல் பார்ம் பற்றி எனக்கு எந்தவித பிரச்சனையும் கிடையாது. அவர் சிறந்த தொடக்க ஆட்டக்கார மேலும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் என்ன செய்தாரோ அதை மீண்டும் கொண்டு வருவார் என்று நம்புகிறேன். அவர் உலகம் முழுக்க ரன்கள் அடித்திருக்கிறார். அவர் நாம் எதிர்பார்க்கும்வேலையை நிச்சயம் செய்வார்.

- Advertisement -

இதையும் படிங்க: இங்கிலாந்து வீரருக்கு மூன்று பார்மட் கிரிக்கெட் விளையாட தடை.. அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?

மேலும் அர்ஸ்தீப் சிங் பந்துவீச்சை பற்றியும் எந்தக் கவலையும் இல்லை. ஐபிஎல் தொடரில் ஆடுகளங்களின் தன்மை மற்றும் சிறிய மைதானம் ஆகியவை பந்துவீச்சில் பெரிய தாக்கத்தை உண்டாக்குகின்றன. ஆனால் உலகக் கோப்பை தொடர் அப்படியானதாக இருக்காது. எனவே நம்முடைய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவார்கள்” என்று கூறியிருக்கிறார்.