பாகிஸ்தானை ஜெயிக்கிறது இருக்கட்டும்.. 2022ல செஞ்ச அந்த தப்ப செய்யாம இருங்க – கங்குலி அறிவுரை

0
86
Ganguly

ஐசிசி ஒன்பதாவது டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி இன்று பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த டி20 உலக கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்ற வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? என சவுரவ் கங்குலி பேசி இருக்கிறார்.

இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 5ஆம் தேதி அயர்லாந்து அணிக்கு எதிராக நியூயார்க் மைதானத்தில் விளையாடுகிறது. இதற்கு அடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான மிக முக்கியமான போட்டியில் ஜூன் ஒன்பதாம் தேதி மீண்டும் நியூயார்க் மைதானத்தில் விளையாடுகிறது.

- Advertisement -

வழக்கம்போல இந்த உலகக் கோப்பை தொடரிலும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கு மிகப்பெரிய அளவில் வியாபாரம் நடைபெற்று முடிந்து இருக்கிறது. மேலும் போட்டிக்கு வழக்கம் போல் ரசிகர்களின் ஆதரவும் மிகப்பெரிய அளவில் இருக்கப் போகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி குறித்தும், நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி எப்படி அணுக வேண்டும்? என்பது குறித்தும் இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “உலகக்கோப்பை தொடர்களில் தொடர்ச்சியாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணியின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்து வந்திருக்கிறது. அதே சமயத்தில் 50 கிரிக்கெட் விட 20 ஓவர் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி ஆபத்தானது. நாம் நடந்து முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை அகமதாபாத் மைதானத்தில் எளிதாக வென்றோம். நாம் அந்த உலகக் கோப்பை தொடரில் சுதந்திரமாக விளையாடினோம். இந்த சுதந்திரம் என்ற வார்த்தையை நான் பயன்படுத்துவதற்கு முக்கியகாரணம், 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நாம் சுதந்திரமாக டி20 உலக கோப்பையில் விளையாடவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : கோலி ரோகித் வேண்டாம்.. முக்கிய இந்த பிரச்சனையை உடைக்க ஜெய்ஸ்வால்தான் வேணும் – இர்பான் பதான் கருத்து

இந்த மாதிரி டி20 உலகக்கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்புகள் இருக்கிறது ஆனால் இந்திய அணி டி20 கிரிக்கெட்டை டி20 கிரிக்கெட் போலவே விளையாட வேண்டும். அவர்கள் பேட்டிங் நீளத்தை அதிகப்படுத்தி முதல் பந்தில் இருந்து அடித்து விளையாட வேண்டும். அவர்கள் சுதந்திரமாக விளையாட வேண்டும். அப்படி விளையாடினால்தான் டி20 உலகக் கோப்பை தொடரை கைப்பற்ற முடியும்” என்று கூறி இருக்கிறார்.