டி20 உலகக்கோப்பை அணியில் 2 வீரர்கள் வெளியே, புதிய 2 வீரர்கள் அறிவிப்பு!

0
1154

டி20 அணியில் இருந்த இரண்டு வீரர்களை மாற்றிவிட்டு புதிதாக இரண்டு வீரர்களை உள்ளே எடுத்து வந்திருக்கிறது வங்கதேச கிரிக்கெட் வாரியம்.

நடந்து முடிந்த வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய முத்தரப்பு கிரிக்கெட் தொடர் வங்கதேச அணிக்கு படுமோசமாக அமைந்தது. விளையாடிய நான்கு போட்டிகளில் நான்கிலும் தோல்வியை தழுவி படுமாசமாக செயல்பட்டது. உலகக்கோப்பை டி20 தொடர் இன்னும் ஓரிரு தினங்களில் துவங்கும் நிலையில், இப்படி மோசமாக வங்கதேச கிரிக்கெட் அணி விளையாடி இருப்பது அணி நிர்வாகத்தினரை கடுமையாக கோபத்திற்கு ஆழ்த்தியதோடு, சில மாற்றங்களையும் செய்வதற்கு வழி வகுத்திருக்கிறது.

- Advertisement -

உலக கோப்பை குரூப் சுற்றில் வங்கதேச அணி, இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் இரண்டு குவாலிஃபயர் அணிகள் என இவர்களை எதிர்கொள்கிறது. தற்போது வங்கதேச அணி செயல்பட்ட விதம் அதன் கிரிக்கெட் வாரியத்திற்கு முற்றிலும் அதிருப்தியை ஏற்படுத்தியதால் உடனடியாக ரிசர்வ் வரிசையில் இருந்த இரண்டு வீரர்களை மெயின் அணிக்கு மாற்றிவிட்டு, மெயின் அணியில் இடம்பெற்று இருந்த இரண்டு வீரர்களை வெளியில் ரிசர்வ் வரிசைக்கு மாற்றியிருக்கிறது வங்கதேச கிரிக்கெட் வாரியம்.

“உலக கோப்பை ரிசர்வ் அணியில் வைக்கப்பட்டு இருந்த சௌம்யா சர்க்கார் மற்றும் ஷொரிஃபுல் இஸ்லாம் இருவரும் தற்போது 15 பேர் கொண்ட அணிக்கு மாற்றப்பட்டு இருக்கின்றனர். 15 பேர் கொண்ட அணியில் இடம்பெற்று இருந்த சபீர் ரகுமான் மற்றும் சைபுதீன் இருவரும் தற்போது ரிசர்வ் வரிசைக்கு மாற்றப்படுகின்றனர்.” என வங்கதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

உலகக்கோப்பை டி20 தொடரில் பங்கேற்கும் வங்கதேச அணி வீரர்கள் பட்டியல்

ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), நஜ்முல் ஹொசைன் சாண்டோ, சௌமியா சர்க்கார், லிட்டன் குமர் தாஸ், அஃபிஃப் ஹொசைன், யாசிர் அலி சௌத்ரி, முசாடெக் ஹொசைன் சைகத், நூருல் ஹசன் சோஹன் (கீப்பர்), மெஹிதி ஹசன் மிராஸ், தஸ்கின் அகமது, முஸ்தாபிஸுர் மஹ்முத், ஷொரிஃபுல் இஸ்லாம், நாசும் அகமது, எபடோட் ஹொசைன்.

- Advertisement -