இன்று நான் விளையாடிய சில ஷாட்கள் விராட் கோலியிடம் கற்றுக் கொண்டது – மார்னஸ் லபுசேன்!

0
1159
Viratkohli

உலக கிரிக்கெட்டில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்தியா ஆஸ்திரேலியா மோதும் நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி இன்று நாக்பூரில் துவங்கியது!

இந்தப் போட்டிக்கான டாசை வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 63.5 ஓவர்களில் மொத்த விக்கட்டுகளையும் இழந்து 177 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக லபுசேன் 123 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் எடுத்து ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் ஸ்டெம்ப்பிங் மூலம் ஆட்டமிருந்து வெளியேறினார்.

ஆஸ்திரேலியா அணி இரண்டு ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் இருந்த பொழுது, ஸ்மித் உடன் இணைந்து 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

போட்டிக்கு பிறகு பேசிய லபுசேன்
” விராட் கோலி நான் விளையாடுவதை பார்த்து ஒரு டீசண்டான ஷாட்டை நான் விளையாடியதாக நினைத்தால் அது எப்போதும் நன்றாக இருக்கும். நான் இன்று இங்கு விளையாடிய சில ஷாட்கள் நிச்சயமாக அவரிடமிருந்து கற்றுக் கொண்டதுதான். தொடரை வெல்லத்தான் நாங்கள் இங்கு இருக்கிறோம். நாங்கள் மீண்டு வர முயற்சிப்போம். எங்களால் முடிந்தவரை கடுமையாக போராடி மீண்டும் உள்ளே வந்து இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் மூலமும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -

தொடர்ந்து பேசிய அவர்
” எவ்வளவு ஸ்கோர் சரியாக இருக்கும் என்று எப்போதும் கணிப்பது கடினமான ஒரு விஷயம். நான் எனது பார்ட்னர்ஷிப்பை 100 150 ரன்களுக்கு நீட்டித்து இருந்தால் அடுத்து வரக்கூடிய எங்களது பேட்ஸ்மேன்கள் தன்னம்பிக்கையுடன் சுதந்திரமாக விளையாடி இருப்பார்கள். அப்பொழுது ஆடுகளத்திற்கு சரியான ஸ்கோர் என்பது மாறும். அதே சமயத்தில் இங்கு பந்து திரும்புவதை வைத்து பார்க்கும் பொழுது
220, 240 ரன்கள் எங்களிடம் இருந்து வந்திருந்தால் அது ஒரு நல்ல முயற்சியாக இருந்திருக்கும்” என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்!