100வது டெஸ்டில் விராட் கோலி எவ்வளவு ரன் சேர்ப்பார் எப்படி அவுட்டாவார் என்று முன்னரே கணிப்பு – ட்விட்டரில் ரசிகர்கள் அதிர்ச்சி

0
3805
Virat Kohli 100th Test dismissal

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று மொஹாலியில் தொடங்கியுள்ளது. கேப்டன் ரோஹித் ஷர்மா முதல் முறையாக இந்திய அணியை டெஸ்ட் போட்டிகளில் இன்று முதல் வழி நடத்துகிறார். மறுபக்கம் இந்த டெஸ்ட் போட்டி விராட் கோலியின் 3வது டெஸ்ட் போட்டி என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஓபனிங் வீரர்களாக ரோஹித் மற்றும் மயங்க் அகர்வால் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். ரோஹித் 28 பந்துகளில் 29 ரன்னும் மயங்க் அகர்வால் 49 பந்துகளில் 33 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினர்.

ஹனுமா விஹாரி நிதானமாக விளையாடி 58 ரன்கள் குவித்தார். 100வது போட்டியில் விராட் கோலி நிதானமாக விளையாடி 45 ரன்கள் குவித்து அரைசதத்தை 55 ரன்கள் வித்தியாசத்தில் கோட்டை விட்டார். 55 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி முதல் இன்னிங்சில் 204 ரன்கள் குவித்துள்ளது. தற்பொழுது களத்தில் ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் நிதானமாக விளையாடி கொண்டு வருகின்றனர்.

எதிர்பாராத வகையில் தனது விக்கெட்டை பறிகொடுத்த விராட் கோலி

75 பந்துகள் பிடித்து 45 ரன்கள் அடித்து நிதானமாக விளையாடி கொண்டிருந்த விராட் கோலி 44 வது ஓவரில் லசித் எம்புல்தனியா வீசிய பந்தில் க்ளீன் பவுல்டு ஆனார். அந்த பந்து ஸ்டெம்பை பதம் பார்க்கும் என்று யாரும் நம்பவில்லை. துரதிஸ்டவசமாக எம்புல்தனியா வீசிய பந்து லாககமாக டாப் ஸ்டெம்பம்பை பதம் பார்த்தது.

45 ரன் எடுத்த நிலையில் விராட் கோலி அவுட் ஆனார். தனது விக்கெட்டை பறிகொடுத்தது விராட் கோலி ஆனால் அந்த தருணத்தை முதலில் நம்பவே முடியவில்லை. திகைத்துப்போய் பந்து வீச்சாளரை பார்த்தார். டிரெஸ்ஸிங் ரூமில் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் திகைத்தவாறு காட்சியளித்தார்.

விராட் கோலியின் விக்கெட்டை முன்னே கணித்த முகம் தெரியாத நபர்

டுவிட்டர் வலைத்தளத்தில் முகம் தெரியாத நபர் ஒருவர் இன்று அதிகாலை 12 நாற்பத்தி ஆறு மணிக்கு ஒரு பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் “தன்னுடைய 100வது போட்டியில் விளையாடும் விராட் கோலி இன்று சதமடிக்க வாய்ப்பு இல்லை. 100 பந்துகளுக்குள் 45 ரன்கள் குவித்து அவர் அவுட் ஆவார். இன்றைய போட்டியில் அற்புதமான 4 கவர் டிரைவ் அவர் அடிப்பார். மேலும் அவர் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தது திகைத்துப் போய் பார்ப்பார் பின்னர் அவர் ஏமாற்றத்துடன் தலையாட்டிக் கொண்டு வெளியில் நோக்கி நடந்து செல்வார்”, என்று கூறியிருந்தார்.

அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டவாறு விராட் கோலி இன்று ஆட்டத்தில் 4 கவர் டிரைவ் ஷாட் அடித்தார். அவர் குறிப்பிட்டவாறு 100 பந்துகளுக்குள் (76 பந்துகளில்) 45 ரன்கள் குவித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். தனது விக்கெட்டை பறிகொடுத்தவுடன் திகைத்தவாறே பந்து வீச்சாளரை பார்த்து ஏமாற்றத்துடன் தனது தலையை ஆட்டி பெவிலியன் நோக்கியும் நடந்தார்.

முகம் தெரியாத அந்த நபர் கனகச்சிதமாக கணித்து பதிவிட்ட அந்த பதிவு, தற்போது சமூக வலைதளங்களில் உலக அளவில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.