கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

வீடியோ; அதிக விலைக்கு ஏலம் போன ஸ்மிருதி மந்தனா; ஏலத்தை பார்த்து கொண்டாடிய இந்திய வீராங்கனைகள்!

உலகின் மிக வெற்றிகரமான டி20 தொடரான ஐபிஎல் தொடரை இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தி வருவதைப் போல பெண்களைக் கொண்டும் ஐபிஎல் தொடரை நடத்த முடிவு செய்திருக்கிறது!

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடருக்கு ஒவ்வொரு அணிக்கும் அதிகபட்சமாக 12 கோடிகள் ஏலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியும் குறைந்தது 15 அதிகபட்சமாக 18 வீராங்கனைகளை வாங்க வேண்டும்.

அதேபோல் ஒவ்வொரு அணியிலும் எட்டு வெளிநாட்டு வீராங்கனைகள் இருக்க வேண்டும். இதேபோல் விளையாடும் அணியில் ஐந்து வெளிநாட்டு வீராங்கனைகள் இருக்கலாம். அதில் ஒருவர் அசோசியேட் கிரிக்கெட் நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

இப்படியான விதிமுறைகள் வகுக்கப்பட்டு இன்று பெண்கள் ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடைபெற்று வந்தது. இந்த ஏலத்தில் இந்திய அணியின் நட்சத்திர துவக்க வீராங்கனை ஸ்ருதி மந்தனா அதிகபட்சமாக அணியின் மொத்த பணத்தில் 27 சதவீதத்துக்கு ஏலத்தில் போனார். அதாவது 3.40 கோடிக்கு ஏலத்திற்கு போனார். சதவிகித அடிப்படையில் இது மிகப்பெரிய தொகையாகும்!

- Advertisement -

இந்த நிலையில் டி20 உலக கோப்பையில் பங்கேற்று இருக்கும் இந்திய அணி வீராங்கனைகள் நடைபெற்று வரும் பெண்களுக்கான ஐபிஎல் ஏலத்தை தொலைக்காட்சியில் பார்த்து, ஒவ்வொரு இந்திய வீராங்கனைகளும் ஏலத்தில் விலை போகும் போது தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடி வருகிறார்கள். அதில் ஒன்றாக ஸ்மிருதி மந்தனா அதிக தொகைக்கு ஏழத்தில் போனபோது உச்சகட்ட மகிழ்ச்சியை இந்திய வீராங்கனைகள் வெளிப்படுத்தினார்கள். அதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!

- Advertisement -
Published by

Recent Posts