மயங்க் யாதவ் பவுலிங்க்கு.. அந்த பிளான் நான் போடல.. ஸ்ரேயாஸ்தான் ஸ்கெட்ச் போட்டது – ரிக்கி பாண்டிங் வெளியிட்ட தகவல்

0
165
Ponting

நேற்று ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஒரு முக்கியமான திட்டத்தை தான் கொண்டுவரவில்லை எனவும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்தான் கொண்டு வந்தார் எனவும் பஞ்சாப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறியிருக்கிறார்.

இந்த போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 236 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய லக்னோ அணி பவர் பிளேவில் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்து இறுதியாக 199 ரன்கள் மட்டும் எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

- Advertisement -

மயங்க் யாதவ் வித்தியாசம்

கடந்த முறை ஐபிஎல் சீசனில் மயங்க் யாதவ் மிடில் ஓவர்களில் பந்து வீசினார். தற்போது அவர் பவர் பிளேவில் பந்து வீசுகிறார். மேலும் அவர் வேகமாக ஷார்ட் பந்து வீசுவதில் வல்லவர். இதை வைத்து நேற்று கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு முக்கியமான மாற்றத்தை செய்து அசத்தியிருக்கிறார்.

நேற்றைய போட்டியில் பவர் பிளேவின் முதல் ஓவரில் பிரியன்ஸ் ஆர்யா ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்தில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தான் களம் இறங்கவில்லை. இதற்கு பதிலாக ஜோஸ் இங்கிலீஷை களம் இறக்கினார். உள்ளே வந்த அவர் அதிவேக மயங்க் யாதவ் வந்து வீச்சில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் ஷார்ட் பந்தில் பறக்கவிட்டு அசத்தினார்.

- Advertisement -

திட்டம் ஸ்ரேயாஸ் ஐயர் உடையது

இது குறித்து ரிக்கி பாண்டிங் பேசும்பொழுது “ஜோஸ் இங்லீஷை பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்தில் களம் இறக்கியது முழுக்க முழுக்க கேப்டன் எடுக்க முடிவு. பவர் பிளேவில் முன்னதாக ஒரு விக்கெட் விழுந்தால் அவரை அனுப்ப வேண்டும் என்று ஸ்ரேயாஸ் ஐயர் முடிவு செய்திருந்தார். மயங்க் ஆரம்பத்திலேயே பந்து வீசுவார் என்று நாங்கள் நினைத்தோம். மேலும் அவர் ஷார்ட் பந்துகள் அதிகம் வீசுவார். அதே சமயத்தில் ஜோஸ் இங்லீஷ் இந்த பந்தை அடிப்பதில் வலிமையானவர். நேற்று இரவு அதுதான் நடந்தது”

இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. எத்தனை டீமுக்கு பிளே ஆப் வாய்ப்பு இருக்கு.. புள்ளி பட்டியல் முழு அலசல்.. ராஜஸ்தான் இம்பேக்ட்

“இதன் மூலம் எங்கள் மிடில் வரிசையில் இந்திய வீரர்கள் மூன்று பேரை வைத்துக் கொள்ள நாங்கள் முடிவு செய்தோம். இது எல்லாமே எங்களுக்கு நேற்று பலன் அளித்தது. மேலும் நாங்கள் எடுத்த முடிவுகளின் படி எங்களுக்கு பவர் பிளேவில் 70 ரன்கள் கிடைத்தது. எல்லாம் சரியாக அமைந்தது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -