நடப்பு ஐபிஎல் தொடரில் 75% போட்டிகள் முடிவடைந்து இருக்கிறது. இந்த நிலையில் எந்த அணிகள் வெளியேறி இருக்கின்றன? எத்தனை அணிகள் பிளே ஆப் சுற்று வாய்ப்பில் இருக்கின்றன? இதில் எத்தனை அணிகளுக்கு வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கின்றன? என்பது குறித்து பார்க்கலாம்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நான்கு தோல்விகள் புள்ளி பட்டியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி ஒரு தலைப்பட்சமாக மாற்றிவிட்டது. அந்த அணி கையில் இருந்த நான்கு போட்டிகளை கடைசி இரண்டு ஓவர்களில் தோற்று இருக்கிறது. இந்த நான்கு போட்டிகளையும் வென்று இருந்தால் அந்த அணி தற்பொழுது முதல் நான்கு இடங்களில் இருந்திருக்கும். இது நடக்காததால் புள்ளி பட்டியலில் பெரிய மாற்றம் ஏற்பட்டு விட்டது.
வெளியேறிய மூன்று அணிகள்
நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே 11 போட்டிகளில் 4 புள்ளிகள், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 10 போட்டிகளில் 6 புள்ளிகள், ராஜஸ்தான் ராயல்ஸ் 12 போட்டிகளில் 6 புள்ளிகள் எடுத்து அதிகாரப்பூர்வமாக நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்று வாய்ப்பிலிருந்து வெளியேறி விட்டன.
இதற்கு அடுத்து கேகேஆர் அணி 11 போட்டிகளில் 11 புள்ளிகள் எடுத்து ஆறாவது இடத்தில் இருக்கிறது. இந்த அணி அடுத்த மூன்று போட்டிகளையும் வென்றால் 17 புள்ளிகள் எடுக்க முடியும். இதற்கு அடுத்து லக்னோ அணி 11 போட்டிகளில் 10 புள்ளிகள் எடுத்து இருக்கிறது. இந்த அணி மூன்று போட்டிகளையும் வென்றால் 16 புள்ளிகள் எடுக்க முடியும். எனவே இரண்டு அணிகளுக்குமே இன்னும் வாய்ப்புகள் இருக்கிறது.
வலிமையான ஐந்து அணிகள்
இதைத் தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 10 போட்டிகளில் 12 புள்ளிகள் உடன் இருக்கிறது. தொடர்ந்து எல்லாப் போட்டிகளையும் வெல்லும் பட்சத்தில் 20 புள்ளிகள் எடுக்க முடியும். இதற்கு அடுத்து நான்காவது இடத்தில் குஜராத் டைட்டன்ஸ் பத்து போட்டியில் 14 புள்ளிகள் எடுத்து இருக்கிறது. இந்த அணி எல்லா போட்டிகளையும் வென்றால் 22 புள்ளிகள் மொத்தமாக எடுக்க முடியும். எனவே இந்த இரண்டு அணிகளுமே தங்களுடைய நான்கு போட்டிகளில் இரண்டு போட்டிகளைப் பெற்றாலும் பிளே ஆப் சுற்றுக்குள் 99 சதவீதம் இருக்க முடியும்.
மேலும் மூன்றாவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 11 போட்டிகளில் 14 புள்ளிகள் எடுத்து இருக்கிறது. மொத்தமாக இந்த அணியால் 20 புள்ளிகள் எடுக்க முடியும். பஞ்சாப் கிங்ஸ் 11 போட்டியில் 15 புள்ளிகள் எடுத்து இருக்கிறது. இந்த அணியால் 21 புள்ளிகள் மொத்தமாக எடுக்க முடியும். மும்பை அணியும் பஞ்சாப் அணியும் மீதமிருக்கும் மூன்று போட்டியில் ஒரு போட்டியை வென்றாலும் பிளே ஆப் சுற்றில் 99 சதவீதம் இருக்க முடியும். அதேபோல இரண்டு போட்டியை வென்றால் முதல் இரண்டு இடத்திற்குள் வரவும் வாய்ப்புகள் அதிகம்.
இதையும் படிங்க : 2010ல தோனிய பார்த்த மாதிரியே.. இந்த பையன் இப்ப ஐபிஎல்-ல ஆடறத பார்க்க இருக்கு – மேத்யூ ஹைடன்
தற்போது புள்ளி பட்டியலில் ஆர்சிபி அணி 11 போட்டிகளில் 16 புள்ளிகள் எடுத்து முதலிடத்தில் இருக்கிறது. இந்த அணி மீதமிருக்கும் மூன்று போட்டியில் ஒரு போட்டியை வென்றால் கூட புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் நிலைப்பதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. இந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது தற்போது முதல் ஐந்து இடங்களில் இருக்கும் அணிகளுக்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது. இதில் முதல் மூன்று இடங்களில் இருக்கும் அணிகளுக்கு பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கு மிக அதிக வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் தொடர்ந்து ஏதாவது ஒரு அணி போட்டிகளை தோற்றால் வெளியேறவும் வாய்ப்புகள் உண்டு!






