நான் அந்த வீரரை இழந்துட்டேன்.. இனி திரும்ப கிடைக்க மாட்டார்.. கஷ்டமா இருக்கு – ஹர்திக் பாண்டியா பேட்டி

0
820
Hardik

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா வருகின்ற ஐபிஎல் தொடரில் தன் அணியில் முக்கியமான ஒரு வீரரை இழந்து விட்டதாக வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு குஜராத் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் முறையில் கொண்டு வந்தது. மேலும் ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான தனது கேப்டன் ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக அறிவித்து பல சர்ச்சைகளை சந்தித்தது.

- Advertisement -

ராஜதந்திரி ஜெயவர்த்தனே

இதன் காரணமாக தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து மார்க் பவுச்சரை நீக்கிவிட்டு மீண்டும் இலங்கை இலங்கை லெஜெண்ட் ஜெயவர்த்தனேவை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு கொண்டு வந்தது.

அவர் பொறுப்புக்கு வந்ததும் 18 கோடி அதிகபட்சமாக பும்ராவுக்கு கொடுத்து, ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ் மற்றும் ரோஹித் சர்மாவுக்கு சம அளவிலான தொகையை நிர்ணயித்து தக்க வைத்தார். மேலும் அணிக்குள் சமாதானத்தை உருவாக்கி ஹர்திக் பாண்டியாவை தொடர்ந்து கேப்டனாக இருக்கும்படி செய்திருக்கிறார். அதே சமயத்தில் அவர்கள் இசான் கிஷானை மீண்டும் வாங்க முடியாமல் போயிருக்கிறது.

- Advertisement -

நாங்கள் அவரை தவற விடுகிறோம்

இது குறித்து கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறும் பொழுது “இஷான் எங்களுடைய ஓய்வறையின் புத்துணர்ச்சியாகவும் ஆற்றல் ஆகவும் இருந்தார். அவரை நாங்கள் தக்க வைக்காத பொழுதே எங்களால் ஏலத்தில் மீண்டும் வாங்க முடியாது என்று தெரிந்திருந்தோம். அவருடைய கேரக்டரின் காரணமாக எப்பொழுதும் ஓய்வறையை மிகவும் லேசாக நகைச்சுவையால் வைத்திருந்தார்”

இதையும் படிங்க : ஆஸி பயிற்சி போட்டி.. ஜெயித்த பின்னும் ஆடிய இந்திய அணி.. காரணம் என்ன? – வெளியான தகவல்கள்

“அவரிடம் இருந்த அன்பும் அரவணைப்பும் அவருக்கு இயல்பாக இருந்த ஒன்று. இனி கேக்கை மற்றவர்கள் மீது அடிப்பது, வீரர்களிடம் குறும்பு செய்வது எங்கள் அணியில் குறைந்து விடும். இஷான் அந்த அளவுக்கு எங்கள் அணியில் அன்பை கொண்டு வந்தார். நீங்கள் எப்பொழுதும் எங்கள் அணியின் ஆற்றலாக இருந்தீர்கள், நாங்கள் உங்களைத் தவிர விடுகிறோம் இஷான்!” என்று உருக்கமாக கூறியிருக்கிறார்.

- Advertisement -