2024 கடைசி டி20 உலக கோப்பையாக அமைய வாய்ப்பு இருக்கும்.. 6 மெகா  நட்சத்திர வீரர்கள்

0
3365
T20iwc2024

இன்னும் சில நாட்களில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் நாடுகளில் துவங்க இருக்கும் 2024 டி20 உலக கோப்பையே சில முக்கிய பெரிய வீரர்களுக்கு கடைசி டி20 உலகக் கோப்பையாக இருக்கலாம். அப்படியான ஆறு வீரர்கள் குறித்து இந்தக் கட்டுரை தொகுப்பில் பார்க்கலாம்.

ரோகித் சர்மா : தற்போது டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டனாக இருந்து வழிநடத்த இருக்கிறார். 151 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 3974 ரன்கள் எடுத்திருக்கிறார். மேலும் 5 சதங்கள் மற்றும் 29 அரை சதங்கள் அடித்திருக்கிறார். தற்போது 37 வயதாகின்ற காரணத்தினால் மேற்கொண்டு அவர் டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் மட்டுமே விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

டேவிட் வார்னர் : இவர் நடப்பு டி20 உலகக்கோப்பை உடன் ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்து விட்டார். 103 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 3099 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் ஒரு சதம் மற்றும் 26 அரை சதங்கள் அடக்கம்.

கேன் வில்லியம்சன் : 89 சர்வதேச டி20 போட்டிகளில் 2547 ரன்கள் எடுத்திருக்கிறார். இவர் இதுவரையில் இந்த வடிவத்தில் சதம் அடிக்கவில்லை. 18 அரை சதங்கள் அடித்திருக்கிறார். மேலும் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 125 என்று மிகவும் குறைவாக இருக்கிறது.வயது குறைவாக இருந்த போதிலும் கூட, மாறிவரும் டி20 கிரிக்கெட்டுக்கு இவர் அடுத்த டி20 உலக கோப்பை விளையாடுவது கடினம்.

ஆண்ட்ரே ரசல் : டி20 லீக்குகளில் உலகம் முழுவதும் பெரிய முக்கியத்துவம் இருக்கும் வீரர். வெளிப்படையாகவே தனது சொந்த மண்ணில் நடக்கும் 2024 டி20 உலகக் கோப்பை தொடர் இவருக்கு கடைசியாக இருக்கும்என்பது உண்மை. 75 சர்வதேச டி20 போட்டிகளில் 955 ரன்களும் 45 விக்கெட்களும் கைப்பற்றி இருக்கிறார்.

- Advertisement -

டிரெண்ட் போல்ட் : இன்னொரு நியூசிலாந்து லெஜெண்ட் வேகப்பந்துவீச்சாளர். அடுத்த முறை டி20 உலக கோப்பை விளையாடும் பொழுது இவருக்கு 36 வயதாகி இருக்கும். வேகப்பந்துவீச்சாளர் என்பதால் கடினம், மேலும் இவர் நியூசிலாந்து கிரிக்கெட் சம்பள ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிவிட்டார். உலகம் முழுவதும் நடக்கும் டி20 லீக்குகளில் விளையாட விரும்புகிறார். 57 சர்வதேச டி20 போட்டிகள் விளையாடி 74 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.

இதையும் படிங்க : ஐசிசி விருதுகள் 2023: தட்டி தூக்கிய 7 இந்திய வீரர்கள்.. விராட் கோலி ஏமாற்றம்

விராட் கோலி : தற்போது இவருக்கு 35 வயதாகிறது. இவருக்கு இருக்கும் உடல் தகுதிக்கு இன்னும் இரண்டு டி20 உலகக்கோப்பைகள் கூட விளையாடலாம். ஆனால் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இவர் டி20 கிரிக்கெட் விளையாடுவதை விரும்பவில்லை. இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு பல விவாதங்களுக்குப் பிறகு இவரது பெயர் அணியில் சேர்க்கப்பட்டிருந்தது. மொத்தம் 117 சர்வதேச டி20 போட்டிகளில் 4037 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் 1 சதம் மற்றும் 37 அரை சதங்கள் அடக்கம்.