“சிராஜ் 6விக்கெட்.. இந்த 64 வயது லெஜன்ட்க்கு நன்றி சொல்லுங்க” – கவாஸ்கர் அதிரடி!

0
423
Siraj

இந்திய தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ், தென் ஆப்பிரிக்கா அணி 55 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் சரிவுக்கு இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் முக்கிய காரணமாக இருந்தார். அவர் ஒன்பது ஓவர்கள் பந்து வீசி 15 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து ஆறு விக்கெட் கைப்பற்றி, தனது சிறந்த டெஸ்ட் பந்துவீச்சை பதிவு செய்தார்.

- Advertisement -

இந்தக் குறிப்பிட்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி இடம்பெறாதது முதல் டெஸ்ட் போட்டியில் பெரிய பின்னடைவாக இந்திய அணிக்கு அமைந்தது. டீன் எல்கர் அடித்த பெரிய சதம் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக மாறியது.

இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியை வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் களம் இறங்கிய இந்திய அணிக்கு, இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் நல்லதொரு துவக்கத்தை தன்னுடைய பந்துவீச்சால் ஏற்படுத்தி தந்திருக்கிறார்.

விராட் கோலி கேப்டன் பொறுப்பை ஏற்றதற்கு பிறகு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு மிகச் சிறப்பான முறையில் வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆசியா தாண்டி இந்திய அணியால் டெஸ்ட் தொடரை வெல்ல முடியும் என்கின்ற அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “இந்தியாவில் சுழற் பந்துவீச்சாளராக மட்டுமே இருந்தாக வேண்டிய தேவை இல்லை என்று முதன் முதலில் நிரூபித்த கபில்தேவுக்கு நன்றி. இந்திய ஆடுகளங்களிலும் வேகப்பந்துவீச்சாளர்களால் விக்கெட் எடுக்க முடியும்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் வேகப்பந்துவீச்சாளர்கள் புதிய பந்திலோ அல்லது பொதுவாகவோ அதிக உதவியை பெறக் கூடியவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இதன் பிறகு இந்தியா பல்வேறு வேகப்பந்துவீச்சாளர்களை உருவாக்கி இருக்கிறது.

கடந்த 10 முதல் 12 ஆண்டுகளில் ஐபிஎல் தொடர் மூலமாக இந்தியா பல வேகப்பந்துவீச்சாளர்களை கண்டுபிடித்தது. இந்தியாவிற்கு எந்த இடங்களுக்கு வீரர்கள் தேவையோ, அதற்கு இடது மற்றும் வலது கை காம்பினேஷனில் சரியான வீரர்கள் கிடைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இப்படியான இடைவெளிகளை நிரப்ப போதுமான திறமைகள் இந்தியாவில் இருக்கிறது. சமீபத்தில் பும்ரா இல்லாத பொழுது, முகமது சமி அவருடைய இடத்தில் எப்படி செயல்பட்டார் என்று பார்த்தோம். இது கபில் தேவ்க்கு கொடுக்க வேண்டிய காணிக்கையாகும். அவரது பிறந்த நாளான ஜனவரி 6ஆம் தேதி, பிறந்தநாள் பரிசாக இந்திய அணியின் வெற்றி கிடைக்கும் என்று கணிக்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!