டி20 கிரிக்கெட்டில் இந்த ஒரு மாற்றத்தை செய்யுங்க.. வேற லெவல் பரபரப்பா இருக்கும் – அம்பயர் சைமன் டவுல் பேட்டி

0
6
Simon

சர்வதேச கிரிக்கெட்டில் பிரபலமான நடுவரான சைமன் டவுல் டி20 கிரிக்கெட்டில் ஒரு முக்கியமான மாற்றத்தை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார். இதன் மூலம் பேட் மற்றும் பந்துக்கு இடையில் போட்டி சமநிலையில் இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

தற்போது டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தும் விளையாட்டாக இருந்து வருகிறது. எனவே பந்துவீச்சாளர்களையும் போட்டிக்குள் கொண்டு வருவதற்கு ஏதாவது புத்திசாலித்தனமான மாற்றங்களை செய்ய வேண்டியதாக உள்ளது.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் வந்த மாற்றம்

ஐபிஎல் தொடரில் பந்துவீச்சாளர்களை போட்டிக்குள் கொண்டு வருவதற்காக ஒரு ஓவரில் இரண்டு பவுன்சர்களை வீசிக்கொள்வதற்கு அனுமதி கொடுக்கப்பட்டது. மேலும் பனிப்பொழிவு போட்டியில் முடிவை பாதிக்காமல் இருக்க, இரண்டு பிளேயிங் லெவன்கள் கொடுக்கப்படும் முறை கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில் இன்னும் சில மாற்றங்கள் டி20 கிரிக்கெட்டில் தேவைப்படுகிறது. பொதுவாக நடுவர்களிடம் எந்த மாதிரியான மாற்றங்கள் செய்யலாம் என வெளியில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். ஐபிஎல் போன்ற டி20 லீக்குகளில் இருந்தும் இப்படியான அறிவுரைகள் கேட்கப்படும்.

- Advertisement -

இந்த மாற்றத்தை செய்ய வேண்டும்

இதுகுறித்து நடுவர் சைமன் டவுல் கூறும்பொழுது ” நான் தனிப்பட்ட முறையில் இரண்டு டி20 லீக்குகளுக்கு இரண்டு வெவ்வேறு யோசனைகளை தெரிவித்து இருக்கிறேன். அவை இன்னும் நடைமுறைக்கு கொண்டுவரப்படவில்லை. நான் மீண்டும் கிரிக்கெட்டில் பேட் மற்றும் பந்துக்கு இடையில் சமநிலை இருப்பதை பார்க்க விரும்புகிறேன்”

இதையும் படிங்க : முஸ்தஃபிசூர் ரஹமானை ஐபிஎல்-ல் ஆட விடக்கூடாது.. பிசிசிஐக்கு எல்லாம் தெரியும் – முகமது கைஃப் பேச்சு

“டி20 கிரிக்கெட்டில் ஒரு பவுலருக்கு மட்டும் ஐந்து ஓவர்கள் வீசும் படி மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். ஒரு பேட்ஸ்மேன் கடைசி வரையில் நின்று 100 ரன்கள் எடுக்க முடியும். ஆனால் பவுலர்கள் குறிப்பிட்ட ஓவர்கள்தான் வீச முடியும். எனவே இதில் மாற்றம் தேவைப்படும். அதே சமயத்தில் வீட்டில் இருந்து பார்க்கும் ரசிகர்களுக்கு மாற்றங்கள் பிடிக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -