இந்திய கிரிக்கெட்

சிராஜ் ஹெட்டுக்கு செய்தது ஊமை கிரிக்கெட்.. இவ்வளவு மோசமாவா செய்வீங்க? – சைமன் கேடிச் விமர்சனம்

இன்று டிராவிஸ் ஹெட்டுக்கு மோசமான முறையில் பீல்டிங் செட்டப்பை சிராஜ் வைத்திருந்ததாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் சைமன் கேடிச் விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது பிரிஸ்பேன் காபா மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்திய அணிக்கு வழக்கமாக பெரிய சவாலாக மாறி இருக்கும் ஹெட் இந்த போட்டியிலும் சதம் அடித்துசோதனையை கொடுத்திருக்கிறார்.

ஹெட் – ஸ்மித் மெகா பார்ட்னர்ஷிப்

இன்று இரண்டாம் நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் மூன்று விக்கெட்டுகளை மிக வேகமாக இழந்தது. இந்த நிலையில் ஜோடி சேர்ந்த ஹெட் மற்றும் நேற்று இருவரும் சேர்ந்து சிறப்பாக விளையாடி சதம் அடித்து 302 பந்துகளில் 241 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள்.

இதைத்தொடர்ந்து ஸ்மித் முதலில் 190 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து அதிரடியாக விளையாடிய ஹெட் 150 ரன்கள் தாண்டி 160 பந்துகளில் 18 பவுண்டரிகள் உடன் 152 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்த ஜோடி ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலியா அணியை நெருக்கடியில் இருந்து காப்பாற்றி இந்திய அணியின் பக்கமாக அழுத்தத்தை ஏற்றி இருக்கிறது.

- Advertisement -

சிராஜின் ஊமை கிரிக்கெட்

இந்த நிலையில் சிராஜ் ஹெட்டுக்கு தவறான பில்டிங் செட்டப்பை வைத்ததாக விமர்சித்த சைமன் கேடிச் கூறும் பொழுது ” அது சிராஜிடம் நம்ப முடியாததாக இருந்தது. ஏனென்றால் தேர்டு மேனில் அவர் முன்பு சரியான இடத்தில் ஒரு பீல்டரை வைத்திருந்தார். அதற்குப் பிறகு அந்த இடத்தில் இருந்த வீரரை காணவில்லை. ஆனால் சிராஜ் ஓடி வந்து பவுன்சரை வீசினார். இது நிச்சயமாக ஊமை கிரிக்கெட் போல இருந்தது”

இதையும் படிங்க : 111 ரன் 10 விக்கெட்.. கொத்தாக விழுந்த இங்கிலாந்து அணி.. மாஸ் காட்டிய நியூஸி 3 பவுலர்கள் – 3வது டெஸ்ட்

“இந்திய அணி ஹெட்டுக்கு லெக் சைடுக்கு இரண்டு பீல்டரை வெளியில் அனுப்பினார்கள். மேலும் டீப் பாய்ண்ட் திசையில் ஒரு பில்டரை வைத்தார்கள். ஆனால் தேர்டு மேனில் பீல்டர் இல்லை. இப்படி இருக்கும் பொழுது சிராஜ் பவுன்சர் வீசுகிறார். அதை சாதாரணமாக ஹெட் தேர்டு மேனில் தட்டி விட்டு பவுண்டரி அடிக்கிறார்” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -
Published by