இன்று இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி ரன் அவுட் ஆன விதம் பலராலும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
கடந்த இரண்டு டெஸ்ட் போட்டியில் மூன்று முறை விராட் கோலி ஆட்டம் இழந்த விதம் மிகவும் கவலைக்குரியதாக இருந்தது. இந்த நிலையில் வெல்ல வேண்டிய கட்டாயம் இருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விக்கெட்டை தானமாக கொடுத்தது போல கொடுத்து சென்று இருக்கிறார்.
ஜடேஜா – வாஷிங்டன் சுந்தர் கொடுத்த முன்னிலை
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 235 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா ஐந்து விக்கெட் மற்றும் வாஷிங்டன் சுந்தர் நான்கு விக்கெட் கைப்பற்றினார்கள். இந்த தொடரில் முதல்முறையாக ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சு தாக்கத்தை கொடுத்திருக்கிறது.
இதைத் தொடர்ந்து பேட்டிங் வந்த இந்திய மணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா 18 பந்தில் 18 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து ஜெய்ஸ்வால் மற்றும் கில் இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பான முறையில் ஆட்டத்தை முன்னெடுத்துச் சென்று வந்தார்கள். 78 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்று இருந்த இந்திய அணி திடீரென 86 ரன்னுக்கு நான்கு விக்கெட் என சரிந்தது. இதில் விராட் கோலி ரன் அவுட் ஆகி வெளியேறியது பலரையும் கோபப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.
விராட் கோலி மனதில் என்ன இருக்கு?
இன்றைய நாள் முடிவில் விராட் கோலி ரன் அவுட் ஆனது குறித்து பேசி இருக்கும் ரவி சாஸ்திரி கூறும் பொழுது “மோசமான முறையில் ஒரு விக்கெட் வீணானது. விராட் கோலி மனதில் என்னதான் நடக்கிறது என்பது குறித்து எதுவுமே தெரியவில்லை” என்று காட்டமாக விமர்சித்து இருக்கிறார்.
இதையும் படிங்க : இலங்கை ஆஸி டெஸ்ட் தொடர்.. இடம் தேதி அறிவிப்பு.. இந்திய அணியின் பைனல் வாய்ப்பை தீர்மானிக்கும் சீரிஸ்
இதைத்தொடர்ந்து இது குறித்து அனில் கும்ப்ளே கூறும்பொழுது “விராட் கோலி ரன் அவுட்டை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஒரு நாள் ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் விராட் கோலி இப்படி அவுட் ஆவதை யாரும் விரும்ப மாட்டார்கள். அவர் ஷாட்டை ஆடி நேராக ஓடி சென்றது, அவரது விக்கெட்டை அவரே கொடுத்தது போல இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்