ஐபிஎல் 2025

12 பந்தில் 27 ரன்.. தோனி இத செஞ்சிருந்தா ஈஸியா ஜெயிச்சி இருக்கலாம்.. ஏன் முடியல? – சைமன் டால் கேள்வி

நேற்று தோனி ஒரு முக்கியமான விஷயத்தை செய்திருந்தால் போட்டியை வென்றிருக்க முடியும் என நியூசிலாந்து முன்னாள் வீரர் சைமன் டால் கூறி இருக்கிறார்.

- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் முல்லன்பூர் மைதானத்தில் சிஎஸ்கே அணி விளையாடியது. நீண்ட நாட்கள் கழித்து சிஎஸ்கே அணி இன்டெண்ட் காட்டி விளையாடியதை பார்க்க முடிந்தது. தோற்றாலும் கூட சிஎஸ்கே அணி 200 ரன்கள் தாண்டி எடுத்து தோற்று இருப்பது ரசிகர்களை ஓரளவுக்கு கோபப்படாமல் செய்திருக்கிறது.

தோனியின் அதிரடி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ரன்கள் தேவை மிக அதிகமாக இருந்த பொழுது ரவிச்சந்திரன் அஸ்வினை அனுப்பி விட்டு மகேந்திர சிங் தோனி பேட்டிங் செய்ய வராமல் இருந்தது மிகப்பெரிய கேள்விகளை எழுப்பியது. சிஎஸ்கே ரசிகர்களையும் கோபப்பட வைத்திருந்தது.

இந்த நிலையில் அவர் தற்போது பேட்டிங் வரிசையில் முடிந்த வரையில் ஐந்தாவது இடத்தில் வந்து பேட்டிங் செய்கிறார். இல்லை ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்ய வருகிறார். இந்த நிலையில் நேற்று கடைசி மூன்று ஓவர்களில் 59 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டபோது, 12 பந்துகளை சந்தித்த தோனி அதிரடியாக 27 ரன்கள் எடுத்தார். இதில் மூன்று சித்தர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடக்கம்.

- Advertisement -

தோனி இதை செய்தால் வெல்லலாம்

இந்த நிலையில் மகேந்திர சிங் தோனி என்ன செய்தால் சிஎஸ்கே போட்டிகளை வெல்ல முடியும் என்று பேசிய சைமன் டால் கூறும்பொழுது ” தோனி நேற்று 5 பந்தில் மூன்று சிக்ஸர்கள் அடித்தார். ஆனால் மொத்த அணியுமே சேர்ந்து ஐந்து சிக்ஸர்கள் மட்டுமே அடித்தார்கள். தோனிக்கு இன்னும் சிக்ஸர்கள் அடிக்கும் சக்தி இருக்கிறது. இதனால்தான் பேட்டிங் வரிசையில் அவரை மேலே கொண்டு வருவது குறித்து நாம் பேசி வருகிறோம். அவரால் 12 பந்தில் 27 ரன்கள் எடுக்க முடிகிறது. இதையே இரண்டு விக்கட்டுகள் போயிருக்கும் பொழுது அவர் வந்து செய்தால் அது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். ஆனால் வராதது அவர் தவறு கிடையாது”

இதையும் படிங்க : எழுதி வச்சுக்கோங்க.. அடுத்த சச்சின் பிரியன்ஸ் ஆர்யாதான்.. காரணத்தை பாருங்க – நவ்ஜோத் சிங் சித்து பாராட்டு

“நேற்றைய போட்டியில் 190 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட வேண்டிய அவசியம் இருந்தது. கான் வே அரை சதம் அடித்திருந்த போதும் கூட அவர் 140 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினார். அவரை வெளியே அனுப்பிவிட்டு ஜடேஜாவை கொண்டு வந்தார்கள். ஆனால் அது மிகவும் தாமதமாக எடுக்கப்பட்ட ஒரு முடிவு. முன்கூட்டியே ஜடேஜாவை கொண்டு வந்திருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts