நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிராக 39 பந்துகளில் சதம் அடித்த பஞ்சாப் கிங்ஸ் இளம் வீரர் பிரியன்ஸ் ஆர்யா அடுத்த சச்சினாக வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக நவ்ஜோத் சிங் சித்து பாராட்டி இருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 83 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து விட்டது. இப்படியான நிலையில் எதிர் முனையில் நின்று எந்தவித பதட்டமும் இல்லாமல் அதிரடியாக விளையாடி அனுபவ பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கி 39 பந்துகளில் பிரியன்ஸ் ஆர்யா சதம் அடித்தார். அவரது இந்த அதிரடி பேட்டி காரணமாகவே நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
ரிக்கி பாண்டிங் கொடுத்த பெரிய வாய்ப்பு
டெல்லி பிரிமியர் லீக்கில் தெற்கு டெல்லி அணிக்காக பிரியன்ஸ் ஆர்யா மிகச் சிறப்பான முறையில் விளையாடிய எல்லோரது கவனத்தையும் கவர்ந்தார். பிறகு டெல்லி வீரரான முன்னாள் இந்திய வீரர் சிகர் தவான் ரெக்கமண்டேஷன் செய்ய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு வாங்கப்பட்டார். ஜோஸ் இங்கிலீஷ் அணியில் இருந்த போதும் கூட, தொடக்க வீரராக இதுவரை ஐபிஎல் தொடரில் விளையாடாத வரை ரிக்கி பாண்டிங் நம்பிக்கை வைத்து அனுப்பி வைத்தார்.
நேற்று இந்த நம்பிக்கையை பிரியன்ஸ் ஆர்யா ஒட்டுமொத்தமாக காப்பாற்றி இருக்கிறார். இந்த போட்டியில் அவருடைய பேட்டில் இருந்து மட்டும் ஒன்பது சிக்ஸர்கள் வந்தது. இவர் அடித்த சிக்ஸர்களை கூட ஒட்டு மொத்த சிஎஸ்கே அணியும் சேர்ந்து அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நவ்ஜோத் சிங் சித்து பிரியன்ஸ் ஆர்யா அதிக காலம் இந்திய அணிக்கு விளையாடுவார் என்று கூறி இருக்கிறார்.
அடுத்த சச்சின் இந்த பையன்தான்
இதுகுறித்து பேசி இருக்கும் நவ்ஜோத் சிங் சித்து கூறும் பொழுது “என் வார்த்தைகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அவர் இந்தியாவுக்காக நீண்ட காலம் விளையாடுவார். அவர் சச்சினுக்கு பிறகு இந்தியாவுக்கு ஒரு அரிய திறமை கொண்ட பேட்ஸ்மேன். நான் இதை ஏன் சொல்கிறேன் என்றால், அவர் 39 பந்துகளில் சதத்தை யாரை எதிர்த்து அடித்தார் என்று பாருங்கள். ஸ்ரேயாஸ் ஐயர், வதேரா மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் ஆட்டம் இழந்த பிறகு அடித்தார்”
இதையும் படிங்க : ஐபிஎல் கோப்பையை வெல்ல.. இந்த விஷயம் முக்கியமா வேணும்.. ஆனா அது எங்ககிட்ட மிஸ்ஸிங்.. ஒப்புக்கொண்ட சிஎஸ்கே கோச்
“இந்த அசாருதீன், குண்டப்பா விஸ்வநாத் போன்ற மணிக்கட்டுகள் இருக்கின்றன. அவர் ஓவர் பாயிண்ட் மற்றும் கவர் திசையில் சிக்சர் அடித்தார். மேலும் மிட் விக்கெட் திசையிலும் அடித்தார். இப்படி அவர் மைதானம் முழுவதிலும் அடித்தார். அவர் எப்படியான பந்துவீச்சாளர்களை எதிர்த்து அடித்தார் என்று பாருங்கள். அதில் சர்வதேச அனுபவமும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய அஸ்வின் வரையில் அடித்தார். அவர் பஞ்சாப் வெற்றிக்கு உதவிய விதம் பிரம்மிக்க வைக்கிறது” என்று கூறி இருக்கிறார்.






