நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி நிர்வாகம் எடுத்த முடிவுகள் குறித்து நியூசிலாந்து முன்னாள் வீரர் சைமன் டால் மிகக் கடுமையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்தப் போட்டியில் பவர் பிளேவில் பேட்டிங்கில் சிறப்பாக ஆரம்பித்த ராஜஸ்தான் அணி தொடர்ந்து விளையாடிய பொழுது சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை கணிக்க முடியாமல் சுருண்டது. இறுதியில் 151 ரன்கள் மட்டுமே எடுத்த அந்த அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
வீரர்கள் தக்க வைப்பில் சொதப்பல்
ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் முழுக்க பேட்ஸ்மேன்களை தக்க வைத்துக் கொண்டது. அதே சமயத்தில் ஜோஸ் பட்லர் போன்ற மிகத் திறமையான வீரரை வெளியே விட்டது. இத்துடன் சந்தீப் சர்மா அன் கேப்டு பிளேயராக இருக்கின்ற காரணத்தினால் அவரை தக்க வைத்துக் கொண்டது.
கடந்த முறை அவர்களிடமிருந்த திறமையான பந்துவீச்சாளர்களானார்கள் சாகல், அஸ்வின், போல்ட் என யாரையும் தக்க வைக்க ராஜஸ்தான் நிர்வாகம் முன் வரவில்லை. இதன் காரணமாக அவர்களால் நல்ல பவுலிங் யூனிட்டை அமைக்க முடியவில்லை. இதன் காரணமாக தற்போது அவர்கள் பெரிய பின்னடைவை சந்தித்து வருகிறார்கள். மேலும் நேற்றைய போட்டியில் தக்கவைக்கப்பட்ட சிம்ரன் ஹெட்மயரை பேட்டிங்கில் எட்டாவது இடத்திற்கு அனுப்பியது பெரிய விமர்சனத்தை உருவாக்கி இருக்கிறது.
இது குப்பையான முடிவு
இது குறித்து சைமன் டால் பேசும்பொழுது “சிம்ரன் ஹெட்மாயரை எதற்காக காத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எதற்காக அவரை அணியில் தக்க வைத்தார்கள். நேற்று அவரை எட்டாவது இடத்தில் பேட்டிங் செய்ய அனுப்பினார்கள். இதே கயானா அணிக்காக அவர் சில நேரங்களில் மூன்றாவது இடம் மற்றும் நான்காவது இடத்தில் கூட பேட்டிங் செய்திருக்கிறார். இது ஏற்றுக்கொள்ள முடியாத குப்பையான முடிவு”
இதையும் படிங்க : இனி எல்லா உலக கோப்பையும் இந்தியாவுக்குதான்.. மத்த டீம் முழிச்சுக்கோங்க – மைக்கேல் வாகன் பேச்சு
“ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் எடுத்த முடிவுகள் மிகவும் மோசமாக இருந்தது. அவர்கள் இறுதியாக சுபம் துபேவை ஹெட்மாயருக்கு முன்னால் அனுப்பினார்கள். மேலும் கடந்த இரண்டு போட்டிகளாக நான் யூகிக்காத பல மோசமான முடிவுகளை அவர்கள் எடுத்தார்கள். இதன் காரணமாகவே அவர்கள் தோல்வி அடைந்தார்கள்” என்று கூறி இருக்கிறார்.






