மேக்ஸ்வெல் மோசம் இல்லை ரொம்ப மோசம்.. இந்த நம்பரை மட்டும் நீங்களே பாருங்க – சைமன் டால் விமர்சனம்

0
168
Doull

ஐபிஎல் தொடரில் கடந்த இரண்டு வருடங்களாக ஆஸ்திரேலிய நட்சத்திர பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் பேட்டிங் மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் அவரைத் தொடர்ந்து அணியில் சேர்த்து வருவது தமக்கு ஆச்சரியம் அளிப்பதாக சைமன் டால் விமர்சனம் செய்திருக்கிறார்.

ஐபிஎல் மெகா ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக மேக்ஸ்வெல் நான்கு கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். வழக்கமாக 10 கோடி ரூபாயை தாண்டும் அவர் இந்த முறை 4 கோடி ரூபாய் மட்டுமே சேலத்தில் சென்றார். பெரிய அளவில் மற்ற அணிகள் அவரை வாங்குவதற்கு விருப்பம் காட்டவில்லை. ரிக்கி பாண்டிங் அவரை நம்பி வாங்கி இருக்கிறார்.

- Advertisement -

மோசமான ஐபிஎல் செயல்பாடு

கடந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி தொடர்ந்து ஆரம்பத்தில் தோல்விகள் அடைந்ததற்கு மேக்ஸ்வெல் பேட்டிங் மிக முக்கிய காரணமாக இருந்தது. அவர் பலமுறை ரன் ஏதும் எடுக்காமலும் பலமுறை ஒற்றை இலக்க ரன்னிலும் வெளியேறி ஆர்சிபி அணிக்கு தொடர்ந்து ஏமாற்றத்தை கொடுத்துக் கொண்டே இருந்தார்.

தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் பேட்டிங்கில் மேக்ஸ்வெல் மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடாதது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சில நேரங்களில் பெரிய சரிவை உண்டாக்கி விடுகிறது. நேற்றைய போட்டியிலும் வரும் சக்கரவர்த்தியின் உள்ளே வந்த பந்தை கணிக்க முடியாமல் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.

- Advertisement -

மேக்ஸ்வெல் நிலைமை ரொம்ப மோசம்

இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக அவருடைய பேட்டிங் புள்ளி விபரங்களை பார்க்கும் பொழுது அது சாதாரண பேட்டிங் செய்ய தெரியாத ஒரு பந்துவீச்சாளரின் புள்ளி விவரங்களை பார்ப்பது போல இருக்கிறது. இந்த அளவிற்கு வேறு எந்த பேட்ஸ்மேன்களும் ஐபிஎல் தொடரில் நீண்ட காலம் மோசமாக செயல்பட்டு இருக்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மேட்ச்க்கு முன்ன சாகல் நிலைமை இதுதான்.. நான் கேட்டப்ப அவர் ஒரு வார்த்தைதான் சொன்னாரு – ரிக்கி பாண்டிங் பேச்சு

இது குறித்து சைமன் டால் கூறும் பொழுது “நான் மேக்ஸ்வெல் நம்பர்களை பார்க்கும் பொழுது அது மோசமாக இல்லை மிக மோசமாக இருக்கிறது. ஒரு பேட்டிங் ஆல் ரவுண்டராக தேர்ந்தெடுக்கப்பட்ட வீரரிடம் இருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை. அவர் கடைசியாக 13 போட்டிகளில் வெறும் 86 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். அவருடைய ரன் சராசரி வெறும் ஆறு மட்டுமே இருக்கிறது. ஒரு அணி அவரை பந்துவீச்சுக்காக மட்டுமே பயன்படுத்துவதை பார்க்க எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுக்கிறது” என்று கூறியிருக்கிறார்

- Advertisement -