முதல் 3 டெஸ்ட்.. அது ஆஸி பும்ராவுக்கு போட்ட பிளான்.. அவர காப்பாத்துங்க – சைமன் டால் கருத்து

0
434
Bumrah

நடைபெற இருக்கும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் அட்டவணையை ஆஸ்திரேலியா கிரிக்கெட் புத்திசாலித்தனமாக பும்ப்ராவை சோர்வடைய வைப்பதற்காக தயாரித்திருப்பதாக நியூசிலாந்து முன்னால் வீரர் சைமன் டால் கூறியிருக்கிறார்.

இந்திய அணி இந்த மாதம் ஆஸ்திரேலியா சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகள் மேக பந்துவீச்சுக்கு சாதகமான பெர்த், அடிலெய்டு, பிரிஸ்பேன் மைதானங்களில் நடைபெறுகிறது. இதில் அடிலெய்டு மைதானத்தில் நடைபெறும் போட்டி பகல் இரவு டெஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

எல்லா பக்கமும் யோசிக்கும் ஆஸ்திரேலியா

கடந்த இரண்டு முறையாக இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ந்து இரண்டு டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது. இதன் காரணமாக எல்லா வகையிலும் முன்னோக்கி சிந்தித்து எப்படியாவது இந்த முறை இந்திய அணியை உள்நாட்டில் தோற்கடித்து விட வேண்டும் என ஆஸ்திரேலியா முயற்சி செய்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தொடர்ந்து ஆஸ்திரேலியா வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடர் குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். நல்லவிதமாக ஆரம்பித்த அவர்களது கருத்துக்கள், இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் தோல்வி அடைந்ததும், இந்திய அணியை தன்னம்பிக்கையை மேலும் இழக்க வைக்கும் விதமாக மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆஸ்திரேலிய கிரிக்கெட் பும்ராவுக்கு போட்ட திட்டம்

இதுகுறித்து சைமன் டால் கூறும்பொழுது “ஆஸ்திரேலியா பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் அட்டவணையை மிகவும் புத்திசாலித்தனமாக தயாரித்திருக்கிறது. அவர்களுக்கு பேட்ஸ்மேன்கள் எப்படியும் ஃபார்முக்கு வந்து ஏதாவது ரன் எடுப்பார்கள் என்று தெரியும். எனவே அவர்களின் மிகப்பெரிய அச்சுறுத்தலான பும்ராவை சோர்வடைய வைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இதன் காரணமாக தொடர்ந்து வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான மூன்று ஆடுகளங்களில் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளை அமைத்திருக்கிறார்கள்”

“முதலில் அவரை வெப்பம் அதிகமாக இருக்கும் பெர்த் மைதானத்தில் அதிக ஓவர்கள் பேச வைப்பார்கள். இதற்கு அடிலெய்டில் பகல் இரவு போட்டியில் பிங்க் நிற பந்தில் அதிக ஓவர்கள் வீச வைப்பார்கள். தொடர்ந்து மீண்டும் வேகத்திற்கு சாதகமான பிரிஸ்பேன் கூட்டிச் செல்வார்கள்”

இதையும் படிங்க : சொந்த கேப்டனுடன் சண்டையிட்ட அல்ஜாரி ஜோசப்.. 10 வீரர்களுடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ்.. காரணம் என்ன?

“எனவே இந்திய அணி நிர்வாகம் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் பும்ராவை அதிகம் பயன்படுத்துவதை உறுதி செய்து விட வேண்டும். பிறகு அவருடைய இடத்திற்கு சரியான மாற்றுவீரர் ஒருவரை கொண்டு வர வேண்டும். எது எப்படி என்றாலும் ஆஸ்திரேலியா மிக புத்திசாலித்தனமாக திட்டம் தீட்டியிருக்கிறது. ஏனென்றால் அவர்கள் ஒரு டெஸ்ட் தொடரை பெர்த் மைதானத்தில் இருந்து ஆரம்பிக்க மாட்டார்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -