சொந்த கேப்டனுடன் சண்டையிட்ட அல்ஜாரி ஜோசப்.. 10 வீரர்களுடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ்.. காரணம் என்ன?

0
1118
Hope

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் உடன் அந்த அணியின் வீரர் அல்ஜாரி ஜோசப் களத்தில் சண்டையிட்டு வெளியேறியது பரபரப்பான விஷயமாக மாறி இருக்கிறது.

நேற்று இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த தொடரில் ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று தொடர் சமநிலையில் இருந்தது. தொடரை யாருக்கென்று தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி நேற்று நடைபெற்றது.

- Advertisement -

வெளியேறிய அல்ஜாரி ஜோசப்

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. நான்காவது ஓவரை அல்ஜாரி ஜோசப் வீச அதில் ஒரு பந்தை ஜோர்டன் காக்ஸ் பேக்வேர்ட் பாயிண்ட்டில் விளையாடினார். அப்பொழுது அல்சாரி ஜோசப் கைகளை ஆட்டி பேசி தன்னுடைய அதிருப்தியை கேப்டன் ஷாய் ஹோப் இடம் வெளிப்படுத்தினார்.

மேலும் அவர் பந்து வீச வந்த பொழுது ஸ்லிப்பில் இருவர் இருந்தார்கள். இதிலும் அல்ஜாரி ஜோசப் உடன்படவில்லை. அவர் கேப்டனின் பீல்டிங் பொசிஷன் மீது அதிருப்திலேயே பந்து வீசினார். நேற்று களத்தில் கேப்டன் மற்றும் அல்ஜாரி ஜோசப் இடையே நல்ல நட்பு புரிதல் இல்லை என்பது மிகத் தெளிவாக தெரிந்தது.

- Advertisement -

இந்த நிலையில் அதே ஓவரின் நான்காவது பந்தை 148 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி, ஜோர்டான் காக்ஸ் டிக்கெட்டை கேப்டன் ஷாய் ஹோப் கேட்ச் மூலம் அல்காரி ஜோசப் வீழ்த்தினார். மேலும் அந்த ஓவரை முடித்த அவர் களத்தை விட்டு மிகவும் கோபமாக வெளியேறி சென்று விட்டார்.

பத்து வீரர்களுடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ்

இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி 10 வீரர்களுடன் அந்த ஓவரை விளையாடியது. கோபமாக ஓய்வறைக்கு சென்ற அல்ஜாரி ஜோசப் உடனேயே திரும்பி வந்து வெளியில் அமர்ந்ததால், மேற்கொண்டு மாற்றுவீரரை களம் இறக்கவில்லை. பிறகு அந்த ஓவர் முடிந்ததும் அவர் களத்திற்குள் வந்து விட்டார். ஆனாலும் கேப்டன் ஷாய் ஹோப் பந்துவீச்சில் அவரை நிறுத்திவிட்டு ரொமாரியோ செப்பர்டை வீச வைத்தார்.

இதையும் படிங்க : 161 ரன்.. ராகுல் ருதுராஜ் மீண்டும் ஏமாற்றம்.. தனியாளாய் கலக்கிய ஜுரல்.. ஆஸி ஏ அணி அபார பந்துவீச்சு

இந்த போட்டியில் அல்ஜாரி ஜோசப் பத்து ஓவர்கள் முழுமையாக பந்து வீசி இரண்டு விக்கெட் கைப்பற்றினார். மேலும் இந்த போட்டியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் இங்கிலாந்து அணிக்கு எதிராக கைப்பற்றியது!

- Advertisement -