133 ரன்ஸ்.. 309 ஸ்ட்ரைக் ரேட்.. ரோகித் சர்மாவின் அதிவேக சத சாதனையை முறியடித்த சிக்கந்தர் ராசா.. டி20 கிரிக்கெட்

0
504

ஐசிசி டி20 உலக கோப்பை தகுதிச்சுற்றின் ஒரு பகுதியான துணை பிரிவு ஆப்பிரிக்கா குவாலிபயர் பி தகுதி சுற்றுப்போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் காம்பியா அணிகள் மோதிய ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் இந்திய ஜாம்பவான் வீரர் ரோகித் சர்மாவின் சாதனையை முறியடித்து இருக்கிறார்.

இதன் மூலமாக டெஸ்ட் விளையாடும் நாட்டின் ஒரு வீரர் படைத்துள்ள சிறப்பான சாதனையாக இது பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஜிம்பாப்வே அணி சாதனை வெற்றி

2026 டி20 உலக கோப்பைக்கு தகுதி பெறும் விதமாக தகுதி சுற்றின் ஒரு தொடரான சப் ரீஜினல் ஆப்பிரிக்கா தகுதி சுற்று போட்டியின் பி பிரிவு ஆட்டத்தில் ஜிம்பாப்வே மற்றும் காம்பியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் காம்பியா அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கியது. இதன் மூலமாக 20 ஓவர்களில் நான்கு விக்கட் இழப்புக்கு 344 ரன்கள் குவித்தது.

இதில் அதிகபட்சமாக ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா 43 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ஏழு பவுண்டரி மற்றும் 15 சிக்சர் உடன் 309.3 ஸ்ட்ரைக் ரைட்டில் அதிரடியாக விளையாடி 133 ரன்கள் குவித்தார். இதன் மூலமாக டி20 வரலாற்றில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஒரு அணி அடித்த அதிகபட்ச ரன்களாக இது அமைந்தது. வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய காம்பியா அணி ஜம்பாப்வே அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் வெறும் 54 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.

- Advertisement -

ரோகித் சர்மாவின் சாதனையை முறியடித்த சிக்கந்தர் ராசா

இதன் மூலமாக ஜிம்பாப்வே அணி 290 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 144 ரன்கள் விளாசிய ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராசா ஆட்டநாயகன் விருது பெற்றார். 33 பந்துகளில் சதம் அடித்ததன் மூலமாக டெஸ்ட் விளையாடும் நாட்டின் ஒரு வீரரின் அடித்த அதிவேக சதமாக இது அமைந்திருக்கிறது. இதன் மூலமாக இலங்கை அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் அடித்த இந்திய வீரர் ரோகித் சர்மாவின் சாதனையை தற்போது சிக்கந்தர் ராசா முறியடித்திருக்கிறார்.

இதையும் படிங்க:இந்திய அணி அவங்களை பார்த்து தப்பு செஞ்சுட்டாங்க.. நாங்க இந்த நால்முனை வியூகம் வச்சிருக்கோம் – டாம் லாதம் பேட்டி

மேலும் தென் ஆப்பிரிக்க அணியின் டேவிட் மில்லர் வங்கதேச அணிக்கு எதிராக 35 பந்துகளில் தனது அதிவேக சதத்தை பூர்த்தி செய்து இருக்கிறார். மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிரிக்கெட் வீரர் ஜான்சன் சார்லஸ் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 39 பந்துகளில் சதமும், இந்திய வீரர் சஞ்சு சாம்சன் வங்கதேச அணிக்கு எதிராக 40 பந்துகளில் சதமும் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் ஜிம்பாப்வே அணி வீரர் சிக்கந்தர் ராசா இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.

- Advertisement -