கில்லை நீக்கியது கொஞ்சமும் சரியில்லை.. சுத்தமா தெளிவா இல்லாம இருக்காங்க – தினேஷ் கார்த்திக் பேச்சு

0
120
Gill

இன்று வெளியிடப்பட்ட டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் சுப்பமன் கில்லை நீக்கியது தெளிவின்மையை காட்டுவதாக தினேஷ் கார்த்திக் விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக இருந்த கில் மற்றும் இந்திய டி20 அணியின் இரண்டாவது விக்கெட் கீப்பராக இருந்து வந்த ஜிதேஷ் சர்மா இருவரும் நீக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் இவர்களுடைய இடத்தில் இஷான் கிஷான் மற்றும் ரிங்கு சிங் இருவரும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

தெளிவின்மையை காட்டுகிறது

தற்போது இந்திய தேர்வுக் குழு எடுத்திருக்கும் இந்த முடிவு குறித்து பல முன்னாள் வீரர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் சமூக வலைதளங்களில் தங்களுடைய பாராட்டை தெரிவித்து வருகிறார்கள். கில் பார்மில் இல்லாததால் இந்த முடிவு பலரும் வரவேற்கும் படியாக மாறி இருக்கிறது.

இந்த நிலையில் இது குறித்து விமர்சித்து இருக்கும் தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது ” தற்போது ஜிதேஷ் சர்மாவுக்கு பதிலாக அந்த இடத்தில் ரிங்கு சிங்குதான் இருப்பார். கில்லையும் ஜிதேஷ் சர்மாவையும் நீக்கியது மிகப்பெரிய செய்தி. இப்படி நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவே கிடையாது. இந்த நீக்கம் கொஞ்சம் தெளிவின்மையைத்தான் காட்டுகிறது. இதுவரையில் கில்லை ஆதரித்து வந்தார்கள். ஆனால் அணியை தேர்வு செய்யும் நாளில் அவரை கைவிட்டு விட்டார்கள்”

- Advertisement -

இரண்டு சிறந்தவர்களை இழக்கிறார்கள்

“தற்போது இந்திய டி20 அணியின் தொடக்க ஆட்டக்காரர் மற்றும் துணை கேப்டின் லெவனில் மட்டும் இல்லாமல் 15 பேர் கொண்ட அணியில் இருந்தே நீக்கப்பட்டு இருக்கிறார். மேலும் அவர்கள் கூடுதலாக ஒரு துவக்க ஆட்டக்காரரை கொண்டு வர விரும்பினார்கள். இதன் காரணமாக இஷான் கிஷானை கொண்டு வந்து ஜிதேஷ் சர்மாவை நீக்கி விட்டார்கள்”

இதையும் படிங்க : நாங்கள் கில்லை நீக்கியது இதனால்தான்.. எங்களுக்கு திறமையை விட இது முக்கியம் – அகர்கர் விளக்கம்

“இதுவரை அவர்களுக்கு டி20 உலகக்கோப்பையில் கிடைத்து வந்த விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற சிறந்த வீரர்களின் அனுபவம் கிடைக்காது. அடுத்ததாக சூரியகுமார் யாதவின் பேட்டிங் ஃபார்ம். அவர் எவ்வளவு சிறந்தவர் என்பதை நாம் அறிவோம். அவர் திரும்பி பழைய நிலைக்கு வந்து விட்டால் அது இந்திய அணிக்கு பலமாக மாறும். ஆனால் இந்த இரண்டு விஷயங்கள் தற்பொழுது இந்திய அணிக்கு பிரச்சினையாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -