ஜூலை 2025 ஆண்டுக்கான ஐசிசி சிறந்த வீரருக்கான விருதை சுப்மன் கில் வென்றுள்ளார். முறையான தேர்வு குழு உறுப்பினர்களின் வாக்குகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் வாக்குகளை உள்ளடக்கிய முறையில் விருதுகள் வழங்கப்படுகிறது. கில், இங்கிலாந்தில் நடந்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் 94.50 சராசரியில் 567 ரன்கள் குவித்த பிறகு, மாதத்தின் சிறந்த வீரர் விருதை நான்கு முறை வென்ற முதல் வீரரானார்.
கில் ஏற்கனவே, ஐசிசி சிறந்த வீரர் விருதுகள் ஜனவரி 2023, செப்டம்பர் 2023 மற்றும் பிப்ரவரி 2025 மாதத்தில் வென்றுள்ளார். .இந்த காலகட்டத்தில் கில்,பர்மிங்ஹாம் நகரில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 430 ரன்கள் குவித்தார். இது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
அந்த டெஸ்ட்டில் அவர் 269 மற்றும் 161 ரன்கள் அடித்தது, தொடரை 1-1 என்று சமன் செய்ய உதவியது. மேலும் மான்செஸ்டரில் நடந்த நான்காவது டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் 103 ரன்கள் அடித்து போட்டியை டிராவாக்கி தொடரை உயிரோட்டமாக வைத்திருந்தார்.இங்கிலாந்து அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆல்-ரவுண்டர் வியான் முல்டர் ஆகியோர் போட்டியில் இருந்த நிலையில், இந்த விருதை கில் வென்றார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கில்,
“ஜூலைக்கான ஐசிசி மாதத்தின் சிறந்த வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இம்முறை இது எனது முதல் டெஸ்ட் தொடரில் கேப்டனாக எனது செயல்திறனுக்காக வந்துள்ளதால் இது இன்னும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.”
“பர்மிங்ஹாமில் இரட்டை சதம் அடித்தது நிச்சயமாக நான் என்றென்றும் போற்றிப் பாதுகாக்கும் ஒன்றாக இருக்கும் மற்றும் எனது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இருக்கும்.இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் எனக்கு கேப்டனாக ஒரு கற்றல் அனுபவமாக இருந்தது.”
இதையும் படிங்க:தென்னாப்பிரிக்க வீரர் பிரவீஸ் புதிய சாதனை.. 56 பந்துகளில் 125 ரன்கள் குவிப்பு.. பந்துவீச்சில் தடுமாறிய ஆஸ்திரேலியா
“மேலும் இரு அணிகளிலிருந்தும் சில அற்புதமான செயல்திறன்கள் இருந்தன. இது இரு அணிகளின் வீரர்களும் நீண்ட காலத்துக்கு நினைவில் வைத்திருப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்த விருதுக்கு என்னைத் தேர்ந்தெடுத்த நடுவர் குழுவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் மற்றும் இந்த உற்சாகமான தொடரின் போது என்னுடன் இருந்த எனது அணியினருக்கு நன்றி.வரும் சீசனில் எனது ஃபார்மைத் தொடர்ந்து நாட்டுக்கு மேலும் பெருமைகளைக் கொண்டு வர விரும்புகிறேன்.” என்று கில் கூறினார்.