இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணி கவனமாக இருக்க வேண்டிய பகுதிகள் குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் அதர்டன் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
3வது டெஸ்ட் தோல்வி
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிற நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தாலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதலில் இன்னிங்ஸ் முடிவில் இரண்டு அணிகளுமே 387 என சமமான ரன்கள் பெற்றது. இதில் முக்கியமான சமயத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் 74 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
அந்த சமயத்தில் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய இங்கிலாந்து அணி இந்திய அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்க, அதை நோக்கி விளையாடிய இந்திய அணி வெற்றி இலக்கை அடைய முடியாமல் 22 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் அதர்டன் சின்ன விஷயங்கள் போட்டியையே ஒரு கணம் மாற்றிவிடும் என சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.
கவனமாக இருப்பது முக்கியம்
இதுகுறித்து அவர் கூறும் போது “இந்த விளையாட்டை பொருத்தவரை இரண்டு பக்கங்கள் உள்ளன. ஒன்று நீங்கள் விளையாடும் போது உங்களது மைல் கல்லை நெருங்கி வருவது, இல்லையென்றால் மறுகணமே அது உங்கள் தலையில் ஏறி விளையாடுவது போன்ற உணர்வை கொடுக்கும். நீங்கள் மைல் கற்களை நான் விரும்பவில்லை என்று கூறும்போது நீங்கள் விரும்பினால் விளையாட்டின் சூழ்நிலையில் மைல் கற்களை நான் விரும்புகிறேன்.
இதையும் படிங்க:கருண் நாயர் திடீர் சரிவுக்கு காரணம் என்ன? பிரச்சினை இது தான்.. விதர்பா பயிற்சியாளர் கருத்து
அந்த இறுதி ஓவர் இந்திய அணி யோசித்த விதத்தை முற்றிலுமாக மாற்றியது. குறிப்பாக ரிஷப் பண்ட் விளையாடிக் கொண்டிருந்தபோது ஸ்டோக்ஸ் செய்த ரன் அவுட் அது ஆட்டத்தை முற்றிலுமாக மாற்றியது. அதாவது 90 ஓவர்களில் 540 பந்துகள் வீசப்படும் போது நீங்கள் ஒவ்வொரு பந்தையும் கவனமாக விளையாட வேண்டும். ஏனென்றால் அது போன்ற ஒரு தருணம் போட்டியையே மாற்றிவிடும். அது உங்களுக்கு ஆரம்பத்தில் தெரியாது போட்டி முடியும்போது அது மிகவும் அடிப்படையான தருணமாக இருக்கும்” என்று அவர் பேசி இருக்கிறார்.






