கனவிலும் கேப்டன் ஆவேன் என நினைக்கவில்லை.. சுப்மன் கில் பேச்சு.. எனக்கு எந்த நெருக்கடியும் இல்லை

0
38

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 20ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் தற்போது பயிற்சி ஆட்த்தில் பங்கேற்றிருக்கிறார்கள். இந்த சூழலில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு பெற்ற நிலையில் இந்திய அணியில் 37வது டெஸ்ட் கேப்டனாக கில் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் நடத்திய நேர்காணலில் பங்கேற்றத்தில் தான் கனவிலும் இந்திய அணியின் கேப்டனாக மாறுவேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர், எனக்கு மட்டுமல்ல என் தந்தை கூட நான் கிரிக்கெட் வீரராக வருவேன் என்று தான் நினைத்தாரே தவிர இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ஒரு நாள் வருவேன் என்று அவரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

- Advertisement -

கேப்டன் பதவி குறித்து கில்:

நான் கேப்டனாக நியமிக்கப்பட போகிறேன் என்ற செய்தி எனக்கு முன்பே தெரியும். ஆனால் அதிகாரப்பூர்வ செய்தி வெளியாக வேண்டும் என்பதற்காக நான் காத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நான் யாரிடமும் அதை சொல்லவில்லை. இந்த செய்தி வெளியானவுடன் என் தந்தை என்னை தொடர்பு கொண்டால் என்னை அவர் வாழ்த்தினார்.

எங்கள் இதயத்திற்கு நெருக்கமான பல விஷயங்களை நாங்கள் அப்போது பேசினோம். கேப்டன் ஆனவுடன் தேர்வுக்குழு தலைவர் அகாகர்கருடன் பயிற்சியாளர் கம்பீர் என்னுடன் பேசினார்கள். ஒரு வீரராக உங்களுடைய இயல்பான குணத்தை நீங்கள் வெளிப்படுத்துங்கள் என்று அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

- Advertisement -

நெருக்கடி இல்லை:

என்னிடம் இருந்து எந்த ஒரு விஷயத்தையும் தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும், உங்களிடம் இல்லாத விஷயத்தையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர்கள் கூறினார்கள். என்னைப் பொருத்தவரை எனக்கு எந்த ஒரு நெருக்கடியும் இல்லை என்று நினைக்கின்றேன்.

இதையும் படிங்க:எங்க ஆஸி தோல்விக்கு காரணமே ஐபிஎல்தான்.. செலெக்டர்ஸ் இனி இந்த 4 பேர நம்பாதீங்க – ஜான்சன் விமர்சனம்

மேலும் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நெருக்கடியும் எனக்கு கிடையாது என்று கில் தெரிவித்துள்ளார். இந்திய அணிகாக 32 டெஸ்ட் போட்டி விளையாடி 1893 ரன்கள் அடித்து இருக்கிறார்.இதில் ஐந்து சதம் அடங்கும். இந்திய டெஸ்ட் அணியில் கேப்டனாக கில் நியமிக்கப்பட்டது தவறான முடிவு என்று பலரும் விமர்சித்து வரும் நிலையில் தனது கேப்டன்சி மூலம் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கின்றார்.

- Advertisement -