இந்திய தொடக்க வீரர் சுப்மன் கில்லை மூன்றாவது டி20ஐ போட்டிக்கு முன்பாக முன்னாள் தென்னாப்பிரிக்கா கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ், ஆதரவாக தெரிவித்துள்ளார்.ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 14 அன்று நடைபெறவுள்ளது.
சுப்மன் கில் டி20 கிரிக்கெட்டில் மோசமான பார்ம் காரணமாக பெரும் அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறார். இதுவரை நடந்த இரு போட்டிகளில் அவரது ஸ்கோர்கள் 4 மற்றும் 0. மேலும், டி20 அணிக்கு திரும்பியதிலிருந்து 14 போட்டிகளில் 263 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
அவரது சராசரி 23.90.
கில் மீது பொறுமை காணுங்கள்:
கில்லின் அணியில் இடம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. ஏனெனில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் போன்றோர் வெளியே அமர்ந்துள்ளனர். இருப்பினும், ஏபி டி வில்லியர்ஸ் கில்லிடம் சற்று பொறுமை காக்குமாறு கேட்டுக்கொண்டார். இது குறித்து பேசிய அவர், “சுப்மன் ஒரு முறை அல்லது இரு முறை தோல்வியடைந்துவிட்டார் என்று இப்போது திடீரென அவரை மாற்றுவது பற்றி பேசுகிறோம்.”
“அவரிடம் சற்று பொறுமையாக இருங்கள். அணியில் பல ஆக்ரோஷமான பேட்ஸ்மேன்கள் இருப்பதால் அவரைப் போன்ற ஒருவர் தேவை. ஆம், ஜெய்ஸ்வால் சிறந்தவர், அவருக்கு இடம் உண்டு, ஆனால் கில்லுக்கு பதிலாக அவரை போட மாட்டேன். கில்லை மூன்றாம் இடத்துக்கு நகர்த்தி ஜெய்ஸ்வாலை தொடக்கத்தில் இறக்கலாம்.”
பதற்றம் அடைய வேண்டாம்:
“ஆனால் அப்போது இரு இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதால் பந்துவீச்சாளர்கள் அவர்களை சுலபமாக கையாளலாம். இது இந்திய அணிக்கு ஒரு இனிய தலைவலி. ஆனால் சுப்மன் கில் இடம் பற்றி பதற்றம் அடைய வேண்டாம். அவருக்கு திறமை உண்டு. என் வார்த்தைகளை குறித்துக்கொள்ளுங்கள். பெரிய போட்டிகளில் அவர் ரன்கள் அடிப்பார்.”
இதையும் படிங்க: மும்பையை வாரிசுருட்டிய சிராஜ்.. கம்பீர் அகர்கருக்கு மாஸ் பதிலடி.. டி20ல நான் ஆட கூடாதா? – அசத்தல் சம்பவம்
” நீங்கள் விரும்பும் வீரராக இருப்பார். கில்லை மாற்ற மாட்டேன். ரோஹித் மற்றும் விராட் முதல் இரண்டு இடங்களில் இருப்பது ஆச்சரியமானது அல்லவா? இவர்கள் இப்போதெல்லாம் அதிக கிரிக்கெட் விளையாடுவதில்லை. ஆனால் உலகின் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ளனர். நான் தரவரிசையின் பெரிய ரசிகன் இல்லை. ஆனால் இது இந்தியாவின் ஒருநாள் அமைப்பில் உள்ள கிளாசை காட்டுகிறது. உலகக் கோப்பை நெருங்கிவரும் நிலையில், இந்த இருவரும் முதலிடத்தில் இருப்பது அற்புதம். ஒருநாள் ஃபார்மெட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தது நல்ல முடிவு என்று நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.






