தேசபக்தியை சூழலுக்கு ஏற்ப பயன்படுத்துவதை நிறுத்துங்க.. இந்திய வீரர்களுக்கு பாக். வீரர் டேனிஷ் கனேரியா அறிவுறுத்தல்

0
79
ICT

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா, இந்திய வீரர்களின் இரட்டை நிலைப்பாட்டு உடன் இருப்பதாக விமர்சித்து உள்ளார். உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் 2025 தொடரில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியை இந்திய வீரர்கள் புறக்கணித்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆனால், இப்போது ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுடன் விளையாடுவதற்கு அவர்கள் தயாராக உள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.கடந்த ஜூலை 20 அன்று, WCL-ல் இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் இடையேயான போட்டிக்கு முன்பு, முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர்களான ஹர்பஜன் சிங், ஷிகர் தவான் உள்ளிட்டோர், சமூக வலைதளங்களில் எழுந்த எதிர்ப்பு காரணமாக அந்தப் போட்டியில் இருந்து விலகினர்.

- Advertisement -

டேனிஷ் கனேரியா கேள்வி:

இது, “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கைக்குப் பிறகு இரு அணிகளுக்கு இடையேயான முதல் கிரிக்கெட் சந்திப்பாக இருக்கவிருந்தது.ஆனால், ஆசிய கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்த தொடரில் மூன்று முறை இரு அணிகளும் மோத வாய்ப்புள்ளது. ஒவ்வொரு பிரிவிலிருந்து இரு அணிகள் சூப்பர் ஃபோர் கட்டத்திற்கு முன்னேறும்.

சூப்பர் ஃபோரில், ஒவ்வொரு அணியும் மற்ற மூன்று அணிகளுடன் ஒரு முறை மோதும். இறுதிப் போட்டி செப்டம்பர் 28 அன்று நடைபெற உள்ளது.இது குறித்து டேனிஷ் கனேரியா தனது அதிருப்தியை வெளிப்படுத்தி, “இந்திய வீரர்கள் WCL-ஐ தேசிய கடமை என்று கூறி புறக்கணித்தனர். ஆனால், இப்போது ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுடன் விளையாடுவது பரவாயில்லையா?”

- Advertisement -

முன்னாள் வீரர் எதிர்ப்பு:

“பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவது சரியென்றால், WCL-லும் பிரச்சினை இருந்திருக்கக் கூடாது. தேசபக்தியை சூழ்நிலைக்கு ஏற்ப பயன்படுத்துவதை நிறுத்துங்கள். விளையாட்டை விளையாட்டாகவே வைத்திருங்கள், பிரச்சாரமாக அல்ல,” என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.

இதனிடையே, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, இந்தியா ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை தவிர்த்து, அவர்களை முன்னேற அனுமதிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். இந்தியா இந்த தொடரில் பங்கேற்பது மற்ற நாடுகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுவதற்காக மட்டுமே என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: கம்பீரின் பதவியை காப்பாற்றுவாரா கில், ராகுல்.. சாட்டையை சுழற்ற போகும் பிசிசிஐ.. கம்பீரின் பயிற்சியாளர் ரெக்கார்ட் என்ன?

“ஆசிய கோப்பையில் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை தவிர்த்து, அவர்களை தகுதி பெற விட வேண்டும். ஆசிய கோப்பையை வெல்ல வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இல்லை. இந்தியா பங்கேற்பதற்கு ஒரே காரணம், மற்ற நாடுகளுக்கு பொருளாதார உதவி செய்வதற்காக மட்டுமே. இல்லையெனில், இதற்கு வேறு காரணம் இல்லை. இதுதான் நடக்க வேண்டும், இந்தியா பாகிஸ்தானுடன் விளையாட முடிவு செய்தால், அது நாட்டு மக்களை கோபப்படுத்தும்!” என்று கோஸ்வாமி தெரிவித்தார்.

- Advertisement -