நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்ததால் இந்திய வீரர்கள் அனைவரும் உள்நாட்டு தொடரில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐயால் அறிவுறுத்தப்பட்டனர்.
இந்த சூழ்நிலையில் மும்பை அணிக்காக விளையாடிய இந்திய சீனியர் வீரர்கள் குறித்து மும்பை தேர்வாளர் சஞ்சய் பாட்டில் சில முக்கிய கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்.
உள்நாட்டுத் தொடரில் இந்திய வீரர்கள்
இந்தியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபி சீசன் தற்போது நடைபெற்று வரும் நிலையில் சில தினங்களுக்கு முன்பாக ஜம்மு காஷ்மீர் மற்றும் மும்பை அணிகள் இந்த தொடரில் விளையாடின. சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்விகளை சந்தித்த நிலையில் இந்திய வீரர்கள் அனைவரும் உள்நாட்டு தொடரில் விளையாட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர்.
இதன்படி மும்பை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் மும்பை அணிகள் முதல் இன்னிங்ஸில் 4 மற்றும் 3 ரன்னில் வெளியேறினார்கள். அதற்கு அடுத்த இரண்டாவது இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் 26 ரன்கள் மற்றும் ரோஹித் சர்மா 28 ரன்களில் வெளியேறினார்கள். நிலையற்ற தொடக்கத்தால் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 120 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 290 ரன்கள் என விளையாடி அந்தப் போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
சீனியர் வீரர்கள் வரவால் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆன்க்ரிஷ் ரகுவன்சி மற்றும் ஆயுஷ் மத்ரே ஆகியோர் வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவானது. அந்த போட்டியில் மும்பை அணி தோல்வி அடைந்தாலும் அதற்குப் பிறகு நடைபெற்ற ஆட்டத்தில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த போட்டியில் மும்பை அணிக்காக சூரியகுமார் யாதவ் மற்றும் சிவம் துபே ஆகியோர் விளையாட உள்ளனர். இந்த சூழ்நிலையில் மும்பை தேர்வாளர் சஞ்சய் பாட்டில் சீனியர் வீரர்களின் வரவால் ஏற்பட்ட மாற்றம் குறித்து சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
திறமையான வீரர்களை இழக்கிறோம்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்த விஷயத்தில் நான் மிகத் தெளிவாக இருக்கிறேன். மும்பை அணியில் ஆறு இந்திய சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் இருந்த போதிலும் ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான தோல்வியை கருத்தில் கொண்டு சூரியகுமார் யாதவ் மற்றும் துபே ஆகியோர் இந்த ரஞ்சி நாக் அவுட் சுற்றில் பங்கேற்காமல் மும்பை அணியின் வெற்றிக்காக சிறப்பாக செயல்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.
இதையும் படிங்க:கீழ விழுந்தும் மீசையில மண் ஒட்டல.. இந்திய ஸ்பின் பவுலிங்கை அடிப்போம்.. நம்பிக்கை தெரிவித்த இங்கிலாந்து கோச்
ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான தோல்வியால் நான் இன்னும் வருத்தப்படுகிறேன். அதுதான் எங்களுக்கு இதுவரை இல்லாத மோசமான தோல்வி என்று நினைக்கிறேன். அந்தப் போட்டியில் இந்திய வீரர்களை ஈடுபடுத்த நாங்கள் சில திறமையான இளைஞர்களை இழக்க வேண்டி இருந்தது” என்று சஞ்சய் பாட்டில் கருத்து தெரிவித்திருக்கிறார்.