நான் டெஸ்ட் பேட்டிங்கில் தப்பு பண்ணிட்டேன்.. இந்த விஷயங்களை தவற விட்டுட்டேன் – சுப்மன் கில் ஓபன் பேட்டி

0
89
Gill

இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் செய்த தவறு பற்றியும், தற்போது தனக்கு கிடைத்திருக்கும் துணை கேப்டன் பொறுப்பு குறித்தும் நிறைய விஷயங்களை மனம் திறந்து பேசி இருக்கிறார்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடக்க இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இந்திய அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும் தற்போது ரஞ்சி டிராபியில் பஞ்சாப் அணிக்காக இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நான் இந்த தவறை செய்து விட்டேன்

இதுகுறித்து சுப்மன் கில் கூறும்பொழுது ” டெஸ்ட் கிரிக்கெட்டில் எனக்கு கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், எனக்கு 20 முதல் 30 ரன்கள் என்று நல்ல தொடக்கம் பெற்றுக் கொண்டு வருகிறேன் என நினைக்கிறேன். ஆனால் அதை பெரிய ரன்களாக மாற்றுவதற்கு நான் என் மீது தேவையில்லாமல் அழுத்தம் கொடுத்து தவறு செய்கிறேன். இதன் காரணமாக என்னுடைய கவன குவிப்பு சிதறுகிறது. இனி இப்படியான தவறை செய்யக்கூடாது”

“சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இந்திய அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. இந்த பொறுப்பின் மூலம் நீங்கள் ஒரு பேட்ஸ்மேன் ஆக மட்டும் இருக்க முடியாது. போட்டி குறித்து ஆழமாக சிந்திக்க கூடிய இடத்தில் நீங்கள் இருக்க வேண்டும்”

- Advertisement -

உள்நாட்டு கிரிக்கெட்டை இப்படித்தான் ஆட முடியும்

“பொதுவாக ஓய்வு என்றால் ஓய்வு எடுப்பது கிடையாது. உங்கள் பேட்டிங்கில் நீங்கள் வேலை செய்ய வேண்டிய சில பகுதிகள் இருக்கின்றன. நீங்கள் உங்களுடைய ஓய்வு காலத்தில் அதை செய்து கொண்டு இருப்பீர்கள். எனவே இங்கு ஓய்வு என்று சொல்லப்படுவது எதையும் செய்யாமல் இருப்பது கிடையாது. எனவே தேசிய அணிக்கு விளையாடுவதற்கு 15 முதல் 20 நாட்கள் இருக்கும்பொழுது தாராளமாக உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடலாம்”

இதையும் படிங்க : இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு.. இவர் என் காதை விட மாட்டார் – சூரியகுமார் யாதவ் பேட்டி

“உங்களுக்கு சில நேரங்களில் பயிற்சி விட ஒரு போட்டியில் விளையாடும் பொழுது ஏற்படும் சவால்கள் பெரியவை. அது பயிற்சியை விட சிறந்தவை. அதே சமயத்தில் நீங்கள் போட்டியில் உங்கள் பேட்டிங்கில் சில விஷயங்களில் வேலை செய்ய முடியாது. அதற்கு நீங்கள் பயிற்சி செய்துதான் ஆக வேண்டும். எனவே உங்களுக்கு அதற்கு நேரம் வேண்டும். இதை எல்லாவற்றையும் பார்த்தே உள்நாட்டு கிரிக்கெட் விளையாட முடியும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -