இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு.. இவர் என் காதை விட மாட்டார் – சூரியகுமார் யாதவ் பேட்டி

0
1183
Surya

நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட திலக் வர்மா மற்றும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ரவி பிஸ்னாய் இருவர் குறித்தும் இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் பாராட்டி பேசி இருக்கிறார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா இங்கிலாந்து இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் பரபரப்பான நிலையில் வெற்றி பெற்றது. இறுதிவரை களத்தில் நின்ற திலக் வர்மா 55 பந்துகளை சந்தித்து 72 ரன்கள் எடுத்து வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தார்.

- Advertisement -

கடைசி பேட்ஸ்மேன்கள் பங்களிப்பு

நேற்று திலக் வர்மாவுக்கு இந்திய அணியின் கடைசிக் கட்ட பேட்ஸ்மேன்கள் அர்ஸ்தீப் சிங் மற்றும் ரவி பிஸ்னாய் இருவரது ஒத்துழைப்பும் சிறப்பாக அமைந்திருந்தது. தற்போது இது குறித்து பேசி இருக்கும் கேப்டன் சூர்யா குமார் யாதவ் அவருக்கே உரிய நகைச்சுவை பாணியில் பாராட்டியிருக்கிறார்.

இதுகுறித்து சூரியகுமார் யாதவ் பேசும்பொழுது “ரவி பிஸ்னாய் அடுத்த இரண்டு நாட்களுக்கு என்னுடைய காதுகளை சாப்பிட போகிறார். தான் பேட்டிங் செய்ததைப் பற்றி பேசிக் கொண்டே இருப்பார். அவர் தன்னுடைய பேட்டிங்கை மெருகேற்ற வலையில் தொடர்ந்து கடுமையாக உழைத்துக் கொண்டு வருகிறார். அவர் பங்களிப்பு செய்ய விரும்புகிறார். இன்று அவர் அதைச் செய்தார் என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. மேலும் அர்ஸ்தீப் சிங்கும் சிறப்பாகவே செயல்பட்டார்”

- Advertisement -

திலக் வர்மாவை பார்க்க மகிழ்ச்சி

“திலக் வர்மா பேட்டிங் செய்த விதத்தில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவரைப் போன்ற ஒருவர் பொறுப்பேற்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. விளையாட்டு சென்று கொண்டிருந்த விதத்தில் நாங்கள் நிம்மதி அடைகிறோம். 160 என்பது நல்ல ஸ்கோர் என்று நாங்கள் உணர்ந்தோம்”

இதையும் படிங்க : இது தோனியின் வீடு.. அதனாலதான் திலக் வர்மா அதுக்கு வாய்ப்பு கிடைச்சும் ட்ரை பண்ணல – ஆகாஷ் சோப்ரா பேட்டி

“இங்கிலாந்து அணியும் சிறப்பாக பந்து வீசியது. ஆட்டம் இறுதி ஓவர் வரை சென்றது. நாங்கள் கடந்த இரண்டு மூன்று தொடர்களாக கூடுதல் பேட்ஸ்மேன் உடன் விளையாடுகிறோம். இது எங்களுக்கு நல்ல வசதியை கொடுக்கிறது. அந்த கூடுதல் பேட்ஸ்மேன் இரண்டு மூன்று ஓவர்கள் பந்து வீசக்கூடியவராகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்” என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -