ரோகித் எங்களை திட்டுவாரு.. ஆனா எனக்கு விராட் கேப்டன்சியில இது ரொம்ப பிடிக்கும் – கில் வெளியிட்ட தகவல்

0
227
Gill

தற்போது இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் சுப்மன் கில் முன்னாள் கேப்டன்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் எப்படி ஆனவர்கள் என்பது குறித்து தெரிவித்திருக்கிறார்.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் லீட்ஸ் ஹெட்டிங்லி மைதானத்தில் வருகின்ற ஜூலை இருபதாம் தேதி துவங்குகிறது. தற்போது இதற்காக இந்திய அணி அதிதீவிரமான தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகிறது.

- Advertisement -

ரோகித் ஆக்ரோஷமான கேப்டன்

இதற்கு முன்பாக இந்திய அணியின் திட்டம் மற்றும் தயாரிப்பு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தற்போதைய இந்திய டெஸ்ட் கேப்டன் கில்லிடம் பேட்டி கண்டார். இதில் சில முக்கியமான கேள்விகளுக்கு கில் வெளிப்படையான பதிலை அளித்திருக்கிறார்.

இது குறித்து கில் பேசும் பொழுது “ரோகித் பாய் ஒரு ஆக்ரோஷமான கேப்டன். அவர் தந்திரோபாய ரீதியில் மிகவும் ஆக்ரோஷமான கேப்டன். தொடருக்கு முன்பும், போட்டிகளின் போதும், போட்டிகளுக்குப் பிறகும் அவர் தன்னுடைய தொடர்பில் மிகவும் தெளிவாக இருக்கக்கூடியவர். எப்பொழுதும் திட்டரீதியாக அவர் சிறப்பாக இருப்பார்”

- Advertisement -

ரோகித் எங்களை திட்டுவார்

“மேலும் ரோகித் பாய் அணியில் வைத்திருக்கும் சூழல் அற்புதமானது. ரோகித் பாய் உங்களை திட்டினாலும் நீங்கள் அதை மனதில் வைத்துக் கொள்ள மாட்டீர்கள். ஏனென்றால் அவர் தனது இதயத்தில் இருந்து திட்ட மாட்டார். விளையாட்டு அடிப்படையில் தான் திட்டுவார் அது நமக்கு நன்றாகவே தெரியும். அவர் சிறந்த ஆளுமை கொண்டவர் மேலும் அணியில் சிறந்த சூழலை வைத்திருப்பார்”

இதையும் படிங்க : நாடு திரும்பிய கம்பீர்.. இந்திய அணிக்கு 2 புதிய பயிற்சியாளர்கள்.. யாருக்கு என்ன பொறுப்பு?.. வெளியான தகவல்கள்

“நான் விராட் பாயின் தலைமையின் கீழ் விளையாடிய பொழுது, டெஸ்ட் போட்டிகளில் களத்தில் அல்லது அவருடைய யோசனைகளில் அவர் காட்டிய முன்முயற்சி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் ஒரு திட்டத்தைக் கொடுத்து அது வேலை செய்யாமல் போனால் அதற்கு மாற்று திட்டத்தை அவர் தயாராக வைத்திருப்பார். உடனடியாக அதை பந்துவீச்சாளர்களுக்கு அவர் தெரிவிப்பார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -