நாடு திரும்பிய கம்பீர்.. இந்திய அணிக்கு 2 புதிய பயிற்சியாளர்கள்.. யாருக்கு என்ன பொறுப்பு?.. வெளியான தகவல்கள்

0
473
Gambhir

தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பி இருக்கின்ற காரணத்தினால் இந்திய அணியின் தயாரிப்புக்கான பொறுப்பை இரண்டு பேரிடம் கொடுத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.

இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் தாயாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தினால் கம்பீர் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்தியா திரும்பி இருக்கிறார்கள்.

- Advertisement -

பொறுப்பை கவனிக்கும் நபர்

தற்போது இந்திய அணி தங்களுக்குள் இந்தியா மற்றும் இந்தியா ஏ என இரண்டு அணிகளாக பிரிந்து நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் விளையாடுகிறது. இந்த நிலையில் நாளை வரை தொடர வேண்டிய இந்த பயிற்சி போட்டியில் இன்றுடன் இந்திய அணி நிர்வாகத்தால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் கம்பீர் நாடு திரும்பி விட்டதால் இந்திய அணியின் தயாரிப்பை துணை பயிற்சியாளர் டென் டஸ்கேட் கவனித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு உறுதுணையாக பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷூ கோடக் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் ஆகியோர் உறுதுணையாக இருந்தார்கள்.

- Advertisement -

மேற்பார்வை பொறுப்புக்கு புதிய நபர்

இந்த நிலையில் மேற்கொண்டு இந்திய அணியின் தயாரிப்புகளை மேற்பார்வை இடுவதற்கு தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் விவிஎஸ் லக்ஷ்மன் நியமிக்கப்பட்டிருக்கிறார் என செய்திகள் தெரிவிக்கிறது. தற்போது அவர் இந்திய அண்டர் 19 அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே அங்குதான் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 122 ரன்.. இந்திய பவுலிங் யூனிட்டை கதறவிட்ட சர்துல் தாகூர்.. போட்டியை பாதியில் நிறுத்திய நிர்வாகம்.. என்ன நடந்தது?

மேலும் கம்பீர் தாயார் உடைய உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், எனவே இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் இருபதாம் தேதி பங்கேற்பதற்கு முன்பாக கம்பீர் இந்திய அணியுடன் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் ஏற்பட்டு இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கிறது.

- Advertisement -