இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்தாவது டெஸ்ட் போட்டியை வென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை சமன் செய்தது குறித்து இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேசியிருக்கிறார்.
இந்தத் தொடரில் இந்திய பயிற்சியாளர் கம்பீர் இங்கிலாந்து தரப்பில் சிறந்த வீரராக ஹாரி புரூக்கையும், பிரன்டன் மெக்கலம் இந்தியா தரப்பில் சுப்மன் கில்லையும் தொடரின் சிறந்த வீரர்களாக தேர்ந்தெடுத்தார்கள்.
கணிப்புகளை உடைத்த இந்தியா
இந்த டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆசஸ் டெஸ்ட் தொடருக்கு இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாக அமையும் என இங்கிலாந்து தரப்பில் ஆரம்பத்தில் கூறப்பட்டு வந்தது. இந்திய அணி இளம் அணியாக இருப்பதால் ஒரு போட்டியை வெல்லலாம் ஆனால் ஒன்றுக்கு மூன்று என இங்கிலாந்து தொடரை வென்று விடும் என்று கணிப்பு சொல்லப்பட்டது.
இந்த நிலையில் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு இரண்டுக்கு இரண்டு என தொடரை சமன் செய்திருக்கிறது. மேலும் ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருப்பதால் நடப்பு தொடரையும் கைவசம் வைத்திருக்கிறது. இந்த வெற்றி புதிய இந்திய டெஸ்ட் அணிக்கு சிறந்த ஆரம்பமாக பார்க்கப்படுகிறது.
சிராஜ் கனவு வீரர்
இதுகுறித்து சுப்மன் கில் பேசும்பொழுது “நிச்சயமாக இந்த தொடரில் ஒவ்வொரு போட்டியும் நான்காவது மற்றும் ஐந்தாவது நாளில் யார் வெல்வார்கள் என்று தெரியாமல் இருந்தது. இரண்டு அணிகளுமே தங்களுடைய சிறந்த திறமையை வெளிப்படுத்தி விளையாடினோம். இந்த போட்டியை பொறுத்தவரையில் இங்கிலாந்து அணியை அழுத்தத்தில் வைப்பதுதான் எங்களது முதன்மை நோக்கமாக இருந்தது. நேற்று கூட அவர்களை அந்த இடத்திற்கு கொண்டு வந்தோம்”
இதையும் படிங்க : புரூக் கேட்ச்சை விட்டு தப்பு பண்ணிட்டேன்.. உடனே போன்ல அத டவுன்லோட் பண்ணி வெச்சேன்.. செஞ்சு முடிச்சிட்டேன் – சிராஜ் பேட்டி
“இந்த போட்டியில் எல்லையை தாண்டி வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா போன்ற நல்ல பவுலர்கள் உங்களிடம் இருக்கும் பொழுது கேப்டன் பதவி எளிதாக இருக்கிறது. ஒரு ஸ்பெல் பந்து வீசுவது என்பது சாதாரணமானது இல்லை. ஏனென்றால் பந்து எல்லா வகையிலும் செயல்படுகிறது. நம் பவுலர்கள் பந்தை பேச வைத்தார்கள். சிராஜ் கேப்டனின் கனவு வீரராக இருக்கிறார். அவர் ஒவ்வொரு போட்டியிலும் சிறந்ததை கொடுத்தார். அவரை எல்லா அணி கேப்டனும் தங்கள் அணியில் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்” என்று கூறியிருக்கிறார்.






